உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / புதிய பங்கு வெளியீடு

புதிய பங்கு வெளியீடு

கடந்த 2000ம் ஆண்டு துவங்கப்பட்ட, 'கிரிஸ்டல் இன்டகரேடட் சர்வீசஸ்', வீட்டுப் பராமரிப்பு, சுகாதாரம், தோட்டக்கலை, இயந்திரவியல், மின்சாரம் மற்றும் பிளம்பிங் சேவைகள், கழிவு மேலாண்மை, கிடங்கு மேலாண்மை, விமான நிலைய மேலாண்மை போன்ற பல்வேறு மேலாண்மை சேவைகளை வழங்கி வருகிறது. அத்துடன் பணியாளர்கள், ஊதிய மேலாண்மை, கேட்டரிங் சேவைகள் உள்ளிட்டவற்றையும் வழங்குகிறது. கடந்த மார்ச் 31, 2023 நிலவரப்படி, 134 மருத்துவமனைகள், 224 பள்ளிகள், இரண்டு விமான நிலையங்கள், நான்கு ரயில்வே நிலையங்கள் மற்றும் 10 மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு, நிறுவனம் சேவை வழங்கி உள்ளது.

நிதி நிலவரம்

கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 30ம் தேதி நிலவரப்படி, இந்நிறுவனத்தின் வருவாய் 455 கோடி ரூபாய். வரிக்கு பிந்தைய லாபம் 20 கோடி ரூபாய்.துவங்கும் நாள் : 14.03.24முடியும் நாள் : 18.03.24பட்டியலிடும் நாள் : 21.03.24பட்டியலிடப்படும் சந்தை : பி.எஸ்.இ., என்.எஸ்.இ., பங்கு விலை : ரூ.680 - 715பங்கின் முகமதிப்பு : ரூ.10புதிய பங்கு விற்பனை : ரூ.175 கோடிபங்குதாரர்கள் பங்கு விற்பனை : ரூ.125 கோடி திரட்டப்படவுள்ள நிதி : ரூ.300 கோடி

கிரிஸ்டல் இன்டகரேடட் சர்வீசஸ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி