உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / அரசு - தனியார் பங்களிப்புடன் கொல்கட்டாவில் புதிய முனையம்

அரசு - தனியார் பங்களிப்புடன் கொல்கட்டாவில் புதிய முனையம்

கொல்கட்டா:கொல்கட்டா துறைமுகத்தின் முக்கியமான பகுதிகளில் ஒன்றான கிடர்பூர் டாக்ஸ் பகுதியில், முதல் முறையாக அரசு - தனியார் பங்களிப்புடன் கூடிய, புதிய சரக்கு முனையம் திறக்கப்பட்டு உள்ளது. கிட்டத்தட்ட 190 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த 'செஞ்சுரி போர்ட்ஸ் லிமிடெட்' முனையம், நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. இந்த முனையத்தில், சரக்குகளை கையாளும் கருவிகள், கிரேன்கள், நவீன தளவாடங்கள், மற்றும் மேம்பட்ட செயல்பாட்டு அமைப்பு ஆகியவை இடம்பெற்றுள்ளன. இது ஆரம்ப கட்டத்தில் 1.65 லட்சம் கன்டெய்னர்கள், 3.30 லட்சம் டன் பிற சரக்குகளை கையாளும் திறன் கொண்டதாக இருக்கும். இந்தத் திட்டத்திற்கான 30 ஆண்டு ஒப்பந்தம், கடந்த 2022ல் கையெழுத்தானது. புதிய முனையம், சாலை, ரயில் மற்றும் உள்நாட்டு நீர்வழிகள் வாயிலாக சரக்குப் போக்குவரத்தை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஓராண்டில், கொல்கட்டா மற்றும் ஹால்டியா துறைமுகங்களில், 4,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான அரசு - தனியார் பங்களிப்பு திட்டங்கள் செயல்பாட்டுக்கு வர உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை