உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / 23 கோடியை தாண்டிய என்.எஸ்.இ., முதலீட்டாளர்கள்

23 கோடியை தாண்டிய என்.எஸ்.இ., முதலீட்டாளர்கள்

புதுடில்லி,:தேசிய பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களின் வர்த்தக கணக்குகள் எண்ணிக்கை 23 கோடியை கடந்து உள்ளதாக என்.எஸ்.இ., தெரிவித்து உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் என்.எஸ்.இ.,யில் முதலீட்டாளர்களின் வர்த்தக கணக்குகள் எண்ணிக்கை 22 கோடியை எட்டிய நிலையில், கடந்த 3 மாதத்தில் மட்டும், புதிதாக 1 கோடி முதலீட்டாளர்கள் கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன. 2025, ஜூலை நிலவரப்படி, மொத்தம் 11.80 கோடி பேர் முதலீட்டாளர்களாக பதிவு செய்து உள்ளனர். மாநிலங்கள் அடிப்படையில், 4 கோடி முதலீட்டாளர்களுடன் மஹாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. 2.5 கோடி முதலீட்டாளர்களுடன் உ.பி., இரண்டாவது இடத்திலும்; 2 கோடி முதலீட்டாளர்களுடன் குஜராத் 3வது இடத்திலும்; தலா 1.30 கோடி முதலீட்டாளர்களுடன் மேற்கு வங்கம், ராஜஸ்தான் 4வது, 5வது இடத்தில் உள்ளன. முன்னணி 5 மாநிலங்களின் பங்களிப்பு, மொத்த கணக்குகளில் பாதி அளவுக்கு கொண்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை