உள்ளூர் செய்திகள்

எண்கள்

80,000

கு ஜராத் மாநிலம் தீன்தயாள் துறைமுகத்தை நிர்வகிக்கும் தீன்தயாள் துறைமுக ஆணையம், 80,000 கிலோவுக்கு குறைவான எடையுள்ள சிறிய கப்பல்களை கட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த ஓர் ஆண்டாக, பெரிய கப்பல்களை கட்டும் முயற்சியில் ஈடுபட்டு வந்த ஆணையம், தொழில்துறையினரிடமிருந்து போதிய ஆதரவு கிடைக்காததால், இத்திட்டத்தை கைவிட்டுள்ளது. கடற்கரையை ஒட்டியுள்ள 2,000 ஏக்கர் நிலத்தை, உலகத்தரம் வாய்ந்த கப்பல் கட்டும் தளமாக மாற்ற ஆணையம் திட்டமிட்டுள்ளது.

9,000

ரி சர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய கடன் இழப்பு விதிமுறைகள் காரணமாக, பஞ்சாப் நேஷனல் வங்கி கிட்டத்தட்ட 9,000 கோடி ரூபாய் அளவுக்கு நிதி சுமையை சந்திக்கக் கூடும் என அந்த வங்கி தெரிவித்துள்ளது. வங்கிகள் இழப்பு ஏற்பட்ட பின் அந்த தொகையை ஒதுக்கி வைப்பதற்கு பதிலாக, முன்கூட்டியே இதை கணித்து ஒதுக்கி வைக்க வேண்டும் என்ற வரைவு விதிமுறையை ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்டது. இது வரும் 2027 ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ