உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / பழைய மின்கலனும் வளம்

பழைய மின்கலனும் வளம்

மின்கலன்களின் பயன்பாடு அதிகரிக்கும் போது, ஆயுட்காலம் முடிந்த மின்கலன்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். அங்கே மறுசுழற்சி (Battery Recycling) முக்கியமான தொழிலாகிறது. பயன்படுத்தப்பட்ட மின்கலன்களில் இருந்து லித்தியம், நிக்கல், கோபால்ட் போன்ற முக்கிய கனிமங்களை மீட்டெடுத்து மீண்டும் உற்பத்தியில் பயன்படுத்த முடியும். இதனால் இறக்குமதி சார்பைக் குறைக்கவும், மூலப்பொருள் பாதுகாப்பை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது. மத்திய அரசின் முக்கிய கனிம மறுசுழற்சி ஊக்கத்திட்டத்தின் கீழ், 2026 ஏப்ரல் வரை 58 நிறுவனங்கள் தகுதி பெற்றுள்ளன. இந்நிறுவனங்கள் 8.5 லட்சம் டன் ஆண்டு செயல்திறனையும், ரூ.5,000 கோடி முதலீட்டையும் முன்மொழிந்துள்ளன. இத்திட்டத்துக்கான மொத்த ஒதுக்கீடு ரூ.1,500 கோடி. மறுசுழற்சிக்கு மட்டுமல்லாமல், பழைய மின்கலனை வேறு பயன்பாட்டுக்குப் பயன்படுத்தும் மறுபயன்பாடு (Second Life / Repurposing), மின்கலன் சோதனை, பழுது பார்த்தல், பாதுகாப்பான சேகரிப்பு, போக்குவரத்து போன்றவையும் தனித்தனி தொழில்களாக வளர வாய்ப்புள்ளது. மின்சார வாகனங்களின் வளர்ச்சி இந்தத் தொழிலுக்கு ஒரு கதவைத் திறக்கிறது. அதற்குப் பின்னால் மின்சார சேமிப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தொழிற்சாலை மின்சாரச் சேமிப்பு போன்ற பல சந்தைகள் உள்ளன. அதனால் மின்கலன் தொழிலை ஒரு வாகனத் தொழிலின் துணைப் பிரிவாக மட்டும் பார்ப்பது குறுகிய பார்வை. இது உற்பத்தி, மூலப்பொருள், மென்பொருள், மின்னணுவியல், மறுசுழற்சி, சேவை என பல துறைகளை இணைக்கும் புதிய தொழில் சங்கிலி. அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவில் மின்கலன் உற்பத்தி மட்டுமல்ல; “மின்கலனைச் சுற்றியுள்ள தொழில்கள்” என்பதே பெரிய சந்தையாக மாறக்கூடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ