உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / எத்தனால் உற்பத்திக்கு அரிசி கிலோ ரூ.28க்கு வழங்க உத்தரவு

எத்தனால் உற்பத்திக்கு அரிசி கிலோ ரூ.28க்கு வழங்க உத்தரவு

புதுடில்லி:எத்தனால் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் நிறுவனங் களுக்கு, இந்திய உணவுக் கழகத்தின் இருப்பில் உள்ள அரிசி, கிலோ ஒன்று 28 ரூபாய்க்கு வழங்கப்படும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஓ.எம்.எஸ்.எஸ்., எனும் திறந்த சந்தை விற்பனை திட்டத்தின் கீழ், எத்தனால் தயாரிப்பு நிறுவனங்கள், இந்திய உணவுக் கழகத்திடம் இருந்து அரிசியை கொள்முதல் செய்து கொள்ளலாம். தற்போதைய நிலையில், வாரந்தோறும் நடைபெறும் மின்னணு ஏலத்தில் அரிசியின் விலையை பொறுத்தே, எத்தனால் தயாரிப்பு நிறுவனங்களுக்கு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில் பார்க்கும்போது, சராசரியாக 32 ரூபாயை ஒட்டியே ஒரு கிலோ அரிசி விற்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், எத்தனால் கொள்முதலுக்கான விலையையும் அதிகரிக்காமல், அரிசி விலையும் நிலையாக நிர்ணயிக்கப்படாமல் இருப்பது நிதி நெருக்கடியை ஏற்படுத்துவதாக நிறுவனங்களின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வரும் மார்ச் மாதம் வரை, எத்தனால் தயாரிப்பு நிறுவனங்களுக்கு, அரிசி கிலோ 28 ரூபாய் என்ற நிலையான விலையில் வழங்க மத்திய அரசு, இந்திய உணவுக் கழகத்துக்கு உத்தரவிட்டு உள்ளது. கடந்த மாத நிலவரப்படி, இந்திய உணவுக் கழகத்திடம் உள்ள கூடுதல் அரிசி இருப்பு 2.85 கோடி டன்களாக உள்ளன.  எண்ணெய் நிறுவனங்களிடம் எத்தனால் வினியோகஸ்தராக பதிவு செய்துள்ள நிறுவனங்களுக்கு மட்டுமே அரிசி வழங்கப்படும் கடந்த 2023 - 24ல் ஒரு லிட்டர் எத்தனால் விலை 58.50 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்ட பிறகு, மாற்றம் செய்யப்படவில்லை அப்போது நிறுவனங்களுக்கு அரிசி கிலோ 20 ரூபாய்க்கு வழங்கப்பட்ட நிலையில், எத்தனால் கொள்முதல் விலையை அரசு உயர்த்துமா என எதிர்பார்ப்பு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ