ஸ்பெயினுக்கு பெட்ரோல் ஏற்றுமதி 46,000 சதவீதம் உயர்வு!
புதுடில்லி: இந்தியாவின் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய ஏற்றுமதிக்கு புதிய சந்தையாக ஸ்பெயின் உருவெடுத்துள்ளது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு செப்டம்பரில் அந்நாட்டுக்கு பெட்ரோலிய ஏற்றுமதி 46,000 சதவீதம் அதிகரித்துள்ளது. நமது வழக்கமான இறக்குமதியாளரான நெதர்லாந்துக்கு ஏற்றுமதி 36 சதவீதம் குறைந்திருக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்தியா, 10 கோடி ரூபாய் மதிப்பிலான பெட்ரோலிய பொருட்களை ஸ்பெயினுக்கு ஏற்றுமதி செய்தது. 2025 செப்டம்பரில் அது 4,520 கோடி ரூபாயாக ஏற்றுமதி அதிகரித்தது. அதாவது, ஸ்பெயினுக்கு பெட்ரோலிய ஏற்றுமதி மாதத்துக்கு மாதம் 61,000 சதவீத வளர்ச்சியை கண்டு வருகிறது. போட்டித்தன்மைக்கேற்ற விலை, கட்டுபடியாகக்கூடிய சரக்கு போக்குவரத்து செலவு, புதிய சந்தைகளை கண்டறிந்தது ஆகியவற்றின் காரணமாக, பெட்ரோலிய ஏற்றுமதியில் தற்போதைய சாதகமான நிலை ஏற்பட்டதாக இத்துறையினர் தெரிவிக்கின்றனர்.