உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / பி.எப்., சேவைகள் ஒரே லாக்-இன் செய்தால் போதும்

பி.எப்., சேவைகள் ஒரே லாக்-இன் செய்தால் போதும்

புதுடில்லி:தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியான பி.எப்., அமைப்பின் அனைத்து சேவைகளையும் இனி பெறுவதற்கு, சந்தாதாரரின் ஒரே லாக்-இன் போதும் என மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். டில்லியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: பி.எப்., அமைப்பின் அனைத்து சேவைகளையும் சந்தாதாரர்கள் சிரமமின்றி பெறுவதற்கான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. திறமையான, வெளிப்படையான, பயன்பாட்டுக்கு எளிதான வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பாஸ்புக் லைட் என்ற பெயரில் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய இணையதளத்தில், பதிவு செய்து வேகமான சேவைகளை பெறலாம். விரிவான தகவல்களை பெறலாம். ஏற்கனவே, நடைமுறையில் உள்ள பாஸ்புக் இணையதளத்தில் சென்றும் சேவை பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை