பிரச்சினையும் தீர்வும் (Tag): பிளாஸ்டிக் பொருட்களின் அளவு குறைகிறதா?
பிரச்சினை: ‘இன்ஜெக்ஷன் மோல்டிங்’ முறையில் தயாரிக்கப்படும் ‘பிளாஸ்டிக்’ பொருட்கள், குளிரும்போது சுருங்கலாம். ஆனால், அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக சுருங்கினால், பொருட்களின் அளவு மாறிவிடும். அளவு சோதனை: மாதிரி பொருளை முழுமையாக குளிரவிட்டு, வெர்னியர் காலிப்பர் கொண்டு அளக்கவும். தயாரிப்பு வரைபடத்தில் உள்ள அளவு வரம்புடன் ஒப்பிடவும். தொழில்நுட்ப தீர்வு: ஹோல்டிங் பிரஷர், ஹோல்டிங் டைம் போதுமானதாக உள்ளதா என சரிபார்க்கவும். பொருள் மோல்டில் இருந்து எடுக்கும்போது போதிய அளவு குளிரவில்லை என்றால், பிளாஸ்டிக் வகை மற்றும் தடிமனுக்கு ஏற்ப கூலிங் டைமை சரிசெய்யவும். மோல்டு வெப்பநிலையையும் சோதிக்கவும். இறுதி சோதனை: புதிய மாதிரியை குளிரவிட்டு அளந்து, சரியான அமைப்பை பதிவு செய்ய வேண்டும். பயன்: அளவு தவறிய பொருட்கள் நிராகரிக்கப்படுவதையும், மறுஉற்பத்தி செலவையும் குறைக்க உதவும். ஆதாரம்: பாரத் ஸ்கில்ஸ்