உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / யு.ஏ.இ., செம்பு இறக்குமதியால் உற்பத்தி பாதிப்பு

யு.ஏ.இ., செம்பு இறக்குமதியால் உற்பத்தி பாதிப்பு

புதுடில்லி, இந்தியா - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையேயான விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தை பயன்படுத்தி, அதிகளவில் செம்பு கம்பிகள் இறக்குமதி அதிகரித்து வருவது கவலையளிப்பதாக இந்திய முதன்மை செம்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மத்திய வர்த்தக அமைச்சகத்துக்கு சங்கம் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது: எந்தவொரு சுரங்கம், ஆலைகள் மற்றும் மறுசுழற்சி கட்டமைப்பு இன்றி, இந்தியாவுக்கு குறைந்த விலையில் யு.ஏ.இ., நிறுவனங்கள், காப்பர் கேத்தோடுகளை கம்பிகளாக மாற்றி வரிச்சலுகைகளை பெறுகின்றன. இந்தியாவின் செம்பு சுத்திகரிப்பு துறையில், முதலீடுக்கு பெரும் அச்சுறுத்தலாக இது மாறி வருகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி