உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ரூ.8.52 லட்சம் கோடி லாபம்

ரூ.8.52 லட்சம் கோடி லாபம்

• வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான நேற்று, சந்தை குறியீடுகள் நல்ல ஏற்றத்துடன் நிறைவடைந்தன. நிப்டி, சென்செக்ஸ் தலா 2 சதவீதம் அளவுக்கு உயர்வு கண்டன. இது, சென்செக்ஸ் இரண்டு வாரங்களில் காணாத உயர்வாகும்• நேற்று வர்த்தகம் ஆரம்பித்தபோதே, சந்தை குறியீடுகள் உயர்வுடன் துவங்கின. சந்தை, கடந்த சில மாதங்களாக கண்ட தொடர் சரிவால், சற்றே குறைந்திருந்த தரமான முன்னணி நிறுவனங்களின் பங்குகளை வாங்க, முதலீட்டாளர்கள் போட்டி போட்டு ஆர்வம் காட்டியதால், சந்தை குறியீடுகள் விறுவிறுவென ஏற்றம் கண்டன• நிப்டியில், அனைத்து துறை சார்ந்த நிறுவனங்களின் குறியீடுகளும் ஏற்றம் கண்டன. அதிகபட்சமாக, வாகனத்துறை சார்ந்த நிறுவனங்களின் குறியீடு 3.74 சதவீதம் ஏற்றம் கண்டது. இதற்கு அடுத்ததாக, ஐ.டி., மற்றும் நிதி சார்ந்த நிறுவனங்களின் குறியீடு 2 சதவீதம் உயர்வு கண்டன• மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு 450 லட்சம் கோடி ரூபாயை தாண்டியது. கடந்த இரண்டு நாட்கள் மட்டும், முதலீட்டாளர்கள் 8.52 லட்சம் கோடி ரூபாய் லாபம் ஈட்டி உள்ளனர்.

அன்னிய முதலீடு

அன்னிய முதலீட்டாளர்கள் நேற்று 1,507 கோடி ரூபாய்க்கு பங்குகளை வாங்கி இருந்தனர்.

கச்சா எண்ணெய்

உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 1.09 சதவீதம் உயர்ந்து, 75.47 அமெரிக்க டாலராக இருந்தது.

ரூபாய் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 11 பைசா குறைந்து, 85.75 ரூபாயாக இருந்தது.டாப் 5 நிப்டி 50 பங்குகள்அதிக ஏற்றம் கண்டவை ஐச்சர் மோட்டார்ஸ் பஜாஜ் பின்சர்வ் பஜாஜ் பைனான்ஸ் மாருதி ஸ்ரீராம் பைனான்ஸ்அதிக இறக்கம் கண்டவை சன் பார்மா பிரிட்டானியா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை