ராமநாதபுரத்தில் பேட்டரி பூங்கா ராசி கிரீன் எர்த் அமைக்கிறது
புதுடில்லி: ராசி கிரீன் எர்த் எனர்ஜி நிறுவனம், தமிழகத்தின் ராமநாதபுரத்தில் 5 கிகாவாட் பேட்டரி பூங்கா அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. பெங்களூருவின் ராசி குழுமத்தைச் சேர்ந்த இந்நிறுவனம், தமிழகத்தில் ஏற்கனவே சூரிய சக்தி பூங்காக்களை அமைத்துள்ளது. இதுகுறித்து ராசி கிரீன் எர்த் நிறுவனத்தின் தலைவர் நரசிம்மன் தெரிவித்ததாவது: ராமநாதபுரத்தில் அமைக்கப்பட உள்ள பேட் டரி பூங்காவில், கேபிள்கள், எரிசக்தி மேலாண்மை அமைப்புகள், மின்சார மாற்று அமைப்புகள் உள்ளிட்ட அனைத்துமே இடம்பெறும். இந்த பூங்கா அமைக்க 1,000 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இங்கு பேட்டரிக்கு தேவையான லித்தியம் தயாரிப்பதற்கான சுத்தப்படுத்தும் ஆலையும் அமைக்கப்படும். இந்நிறுவனம் தற்போது ஜிம்பாப்வேயில் இரண்டு அரிய வகை தாது சுரங்கங் களை குத்தகைக்கு எடுத்து ள்ளது. தொழில்நுட்பம் மற் றும் முதலீட்டுக்காக சீன நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட உள்ளோம். அதே நேரத்தில் உள்நாட்டில் கூட்டு வைத்து உள்ள நிறுவனங்களிடம் இருந்தும் முதலீடுகளை திரட்ட திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு தெரிவித்தார்.