வங்கி கடனில் பங்குகள் வாங்க ஆர்.பி.ஐ., புது விதி
மும்பை:நிறுவனங்கள் மற்றொன்றை கையகப்படுத்துவதற்கும் தனிநபர் ஐ.பி.ஓ.,வில் பங்குகளை வாங்குவதற்கும் வங்கிகள் கடன் வழங்குவதற்கான வரைவு விதிகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஏப்., 1 முதல் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள இந்த வசதிக்கான வரைவு விதிகள் குறித்து வரும் நவம்பர் 21ம் தேதி வரை கருத்து தெரிவிக்கலாம் என ஆர்.பி.ஐ., அறிக்கை தெரிவிக்கிறது. இந்த காரணங்களுக்கு நிதி வழங்க அனுமதிக்குமாறு வங்கிகள் தரப்பில் நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், ரிசர்வ் வங்கி தற்போது அதை ஏற்றுள்ளது.