உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / தாராள வர்த்தக ஒப்பந்த நாடுகளுக்கான ஆயத்த ஆடை ஏற்றுமதி ரூ.16,322 கோடி

தாராள வர்த்தக ஒப்பந்த நாடுகளுக்கான ஆயத்த ஆடை ஏற்றுமதி ரூ.16,322 கோடி

திருப்பூர், மே 11-தாராள வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ள, எட்டு நாடுகளுக்கு, கடந்த நிதியாண்டில், 16,322 கோடி ரூபாய்க்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி நடந்துள்ளது.இந்தியாவை பொறுத்தவரை, ஐக்கிய அரபு நாடுகள், ஆஸ்திரேலியா, ஜப்பான், கொரியா, மொரீசியஸ், சுவிட்சர்லாந்து, நார்வே, ஐஸ்லாந்து மற்றும் வங்கதேசத்துடன் தாராள வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளது. தாராள வர்த்தக ஒப்பந்த நாடுகளுடன் நடந்த ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் தொடர்பான புள்ளிவிவரங்களை, ஆயத்த ஆடைஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் வெளியிட்டுள்ளது. ஒப்பந்தம் செய்துள்ளவற்றில் எட்டு நாடுகளுக்கு, 16,322 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆயத்த ஆடை ஏற்றுமதியாகிஉள்ளது.இதுகுறித்து ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் கூறுகையில், 'ஒன்பது நாடுகளுடன், தாராளவர்த்தக ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளது. தற்போது, பிரிட்டனுடனும் ஒப்பந்தம் கையெழுத்தாகிஉள்ளது. 'எட்டு நாடுகளுக்கான ஏற்றுமதி, 16,322 கோடி ரூபாய்க்கு நடந்துள்ளது. கடந்தாண்டில், 12,134 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி நடந்துள்ள பிரிட்டனுடன் தற்போது ஒப்பந்தம் உருவாகியுள்ளது. நடப்பு நிதியாண்டில், தாராள வர்த்தக ஒப்பந்த நாடுகளுக்கான ஆயத்த ஆடை ஏற்றுமதி, 50,000 கோடி ரூபாயை எட்டும்' என்றனர்.

எட்டு நாடுகளுக்கு ஏற்றுமதி

(ரூபாய் கோடியில்)ஐக்கிய அரபு நாடுகள்: 10,233 ஆஸ்திரேலியா -2,964 ஜப்பான் -1,735 கொரியா - 579 மொரீசியஸ் - 342 சுவிட்சர்லாந்து -314 நார்வே - 152.5 ஐஸ்லாந்து - 2.5 2023-24: 15,133 கோடி ரூபாய் 2024-25: 16,322 கோடிரூபாய்7.86 சதவீதம் அதிகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை