உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / அமெரிக்க ஆடம்பர பொருட்கள் இந்திய விற்பனையில் ரிலையன்ஸ்

அமெரிக்க ஆடம்பர பொருட்கள் இந்திய விற்பனையில் ரிலையன்ஸ்

புதுடில்லி:அமெரிக்காவின் மிகவும் பிரபலமான ஆடம்பர பொருட்கள் விற்பனையகமான 'சாக்ஸ் பிப்த் அவென்யு'வை, இந்தியாவில் அறிமுகப்படுத்த இருப்பதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்து உள்ளது. இது குறித்து அந்நிறுவனத்தின் மூன்றாவது காலாண்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அமெரிக்காவில் ஆடை முதல் ஆபரணங்கள் வரை, பீரிமியம் பொருட்களை விற்பனை செய்து வரும் சாக்ஸ் பிப்த் அவென்யு டிபார்ட்மென்டல் ஸ்டோர், 41 கிளைகளுடன் இயங்கி வருகிறது.இந்தியாவில் பீரிமியம் பொருட்களுக்கான சந்தை விரிவடைந்து வரும் நிலையில், சாக்ஸ் பிப்த் அவென்யு கடைகளை பிரான்ச்சைஸ் முறையில் இந்தியாவில் திறக்க ரிலையன்ஸ் நிறுவனம் திட்டமிட்டு உள்ளது. மேலும், பெற்றோர், குழந்தைகளுக்கான பொருட்களை விற்பனை செய்யும் அமெரிக்காவின் மதர்கேர் மற்றும் டிப்பானி அண்ட் கோ நிறுவனங்களுடன் இணைந்து, புதிய கூட்டு நிறுவனத்தை துவங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.நடப்பு நிதியாண்டின் டிசம்பர் வரையிலான காலத்தில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த நுகர்பொருட்களின் வருமானம், 8,000 கோடி ரூபாயை தாண்டி உள்ளது. இந்திய குளிர்பான சந்தையில், கேம்பா மற்றும் இண்டிபெண்டன்ஸ் பெயரில் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்திய ரிலையன்ஸ், தற்போது சந்தை பங்களிப்பில் 10 சதவீதத்தை கைப்பற்றி உள்ளது. மேலும், நடப்பு நிதியாண்டில், குளிர்பானங்கள் விற்பனை வாயிலாக 1,000 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை