உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / சேலம் டைடல் பார்க் ஹவுஸ்புல் 600 பேருக்கு வேலைவாய்ப்பு 

சேலம் டைடல் பார்க் ஹவுஸ்புல் 600 பேருக்கு வேலைவாய்ப்பு 

சென்னை:சேலம் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பார்க்கில், ஐந்து நிறுவனங்கள் தொழில் துவங்கியுள்ளன. இதனையடுத்து, அனைத்து அலுவலக இடங்களும் நிரம்பி உள்ளது. மேலும் 600 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது. சேலம் மாவட்டம் ஓமலுார், கருப்பூர் கிராமத்தில், 29.50 கோடி ரூபாய் செலவில், 55,000 சதுர அடியில் மூன்று தளங்களுடன், 'டைடல் நியோ' பெயரில் மினி டைடல் பார்க் கட்டடத்தை, தமிழக அரசின் டைடல் பார்க் நிறுவனம் கட்டியுள்ளது. இதை முதல்வர் ஸ்டாலின், கடந்த செப்டம்பர் மாத இறுதியில் துவக்கி வைத்தார்.இரு மாதங்களுக்குள், ஐந்து நிறுவனங்கள் இங்கு தொழில் துவங்கியுள்ளன. அனைத்து அலுவலகங்களும் நிரம்பிய நிலையில், இதன் வாயிலாக, 600 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது. கடந்த செப்டம்பரில் திறக்கப்பட்ட தஞ்சை மினி டைடல் பார்க்கிலும், 100 சதவீத இடங்களில் நிறுவனங்கள் ஏற்கனவே தொழில் துவங்கிவிட்டன. துாத்துக்குடி, வேலுாரில் டைடல் பார்க் கட்டடங்கள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், திறப்பதற்கு முன்பாகவே, 100 சதவீத அலுவலக இடங்களையும், பல்வேறு நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ