உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / கிரே மார்க்கெட் தடுப்பதற்கு செபி முயற்சி

கிரே மார்க்கெட் தடுப்பதற்கு செபி முயற்சி

மும்பை:புதிய பங்கு வெளியீட்டில் விண்ணப்ப காலம் முடிந்த பிறகு, சந்தையில் பட்டியலிடப்படும் வரையிலான நாட்களில் முதலீட்டாளர்கள் வர்த்தகம் செய்வதற்காக, புதிய தளத்தை செபி அறிமுகப்படுத்த உள்ளது. மும்பையில் செபி தலைவர் துஹின் காந்த பாண்டே தெரிவித்ததாவது: புதிய பங்கு வெளியீட்டில், பங்குகள் ஒதுக்கீடு மற்றும் சந்தையில் பட்டியலாகும் நாளுக்கு இடைப்பட்ட 3 நாட்கள் முறைப்படுத்தப்பட்ட வழியில், நிறுவனங்களின் பங்குகளை வர்த்தகம் செய்ய, இந்த தளம் அனுமதிக்கும். இதனால், கிரே மார்க்கெட் எனப்படும், பங்கு விலையை ஏற்றி, இறக்கும் அதிகாரப்பூர்வமற்ற வர்த்தகம் தடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !