தமிழகத்தில் ஷப்லர் இந்தியா 2வது ஆலை
புதுடில்லி : ஜெர்மனியைச் சேர்ந்த ஷப்லர் இந்தியா நிறுவனம், அதன் இந்திய வணிகத்தை விரிவுபடுத்தும் விதமாக, தமிழகத்தில் இரண்டாவது உற்பத்தி ஆலையை துவங்கியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலை, 16,500 சதுர அடி பரப்பளவில் துவங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஓசூரில் ஓர் ஆலை செயல்பட்டு வரும் நிலையில், இதோடு சேர்த்து, நாடு முழுதும் ஷப்லருக்கு ஐந்து ஆலைகள் உள்ளன. இந்த ஆலையில் பெட்ரோல், டீசல் மற்றும் ஹைபிரிட் கார்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் ஷப்லர் நிறுவனம் இந்தியாவில் 1,700 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.