உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஷார்ஜா தொழில் மையத்துடன் ஸ்டார்ட் அப் டி.என்., ஒப்பந்தம்

ஷார்ஜா தொழில் மையத்துடன் ஸ்டார்ட் அப் டி.என்., ஒப்பந்தம்

சென்னை:தமிழகத்தைச் சேர்ந்த, 'ஸ்டார்ட் அப்' எனப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு தேவையான சந்தை வாய்ப்பு, நிதியுதவி உள்ளிட்ட உதவிகளை, தமிழக அரசின் 'ஸ்டார்ட் அப் டி.என்' நிறுவனம் செய்கிறது. துபாய் நாட்டின் வர்த்தக மையத்தில் கடந்த 13ம் தேதி முதல் மூன்று நாட்களாக, உலக ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான கண்காட்சி நடக்கிறது.இதில் பங்கேற்க, தமிழகத்தில் இருந்து 18 ஸ்டார்ட் அப் நிறுவனங்களை, ஸ்டார்ட் அப் டி.என்., நிறுவனம் அழைத்து சென்றுள்ளது. இந்நிறுவனங்கள், மற்ற நாட்டு ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு, தங்களின் தயாரிப்புகளை உலகளாவிய சந்தைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டன.துபாயில், ஸ்டார்ட் அப் டி.என்., மற்றும், 'ஷெரா' எனப்படும் ஷார்ஜா தொழில்முனைவோர் மையம் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன் வாயிலாக, ஷார்ஜா மையம் நடத்தும் தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டங்களில், தமிழக ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பங்கேற்க முடியும்; தகவல்களை பரிமாறிக் கொள்ள முடியும்.மேலும், துபாயின் 'டி.ஐ.எப்.சி., இன்னோவேஷன்' மையத்துடனும், ஸ்டார்ட் அப் டி.என்., புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில், ஸ்டார்ட் அப் டி.என்., தலைமை செயல் அதிகாரி சிவராஜா ராமநாதன், டி.ஐ.எப்.சி., செயல் அதிகாரி முகமது அல்புலுஷி கையெழுத்திட்டனர்.இந்த ஒப்பந்தம் வாயிலாக, தமிழகம், துபாய் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இடையே தகவல் பரிமாறி கொள்வதுடன், டி.ஐ.எப்.சி., நிறுவனத்தின் அலுவலகங்களை தமிழக நிறுவனங்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ