பங்கு சந்தை நிலவரம்: ஏமாற்றம், எச்சரிக்கையால் சரிவு
வாரத்தின் கடைசி வர்த்தக நாளான நேற்றும், இந்திய பங்குச் சந்தைகள்
இறக்கத்துடன் முடிவடைந்தன. உலகளாவிய சந்தை போக்குகளுக்கு மாறாக, நேற்று
வர்த்தகம் ஆரம்பித்த போது இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் சரிவுடன்
துவங்கின. தொடர்ச்சியாக அன்னிய முதலீடுகள் வெளியேற்றம், ஆக்ஸிஸ்
வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் ஏமாற்றம் அளித்ததன்
காரணமாக, எச்சரிக்கையுடன் செயல்பட்ட முதலீட்டாளர்கள் வங்கி துறை பங்குகளை
அதிகளவில் விற்றனர். இதனால் நாள் முழுதும் நிப்டி, சென்செக்ஸ்
இறக்கத்துடன் வர்த்தகமாகின. தொடர்ச்சியாக, இரண்டாவது நாளாக நிப்டி,
சென்செக்ஸ் சரிவுடன் நிறைவடைந்தன.உலக சந்தைகள்
வியாழனன்று
அமெரிக்க சந்தைகள் உயர்வுடன் முடிவடைந்தன. ஆசிய சந்தைகளை பொறுத்தவரை,
ஜப்பானின் நிக்கி, தென்கொரியாவின் கோஸ்பி குறியீடுகள் சரிவுடனும்; சீனாவின்
ஷாங்காய் எஸ்.எஸ்.இ., ஹாங்காங்கின் ஹேங்சேங் குறியீடுகள் சரிவுடனும்
முடிவடைந்தன. ஐரோப்பிய சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகின.சரிவுக்கு காரணங்கள்
* தொடர்ச்சியாக அன்னிய முதலீடுகள் வெளியேறி வருவது * நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் ஏமாற்றம் அளித்தது* வங்கி துறை பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவில் விற்றது.நிப்டி: 24,968.40மாற்றம்: 143.05 இறக்கம் சிவப்புசென்செக்ஸ்: 81,757.73மாற்றம்: 501.51 இறக்கம் சிவப்புhttps://x.com/dinamalarweb/status/1946378686741336487உயர்வு கண்ட பங்குகள் - நிப்டி (%)விப்ரோ 2.21பஜாஜ் பைனான்ஸ் 1.97டாடா ஸ்டீல் 1.63சரிவு கண்ட பங்குகள் - நிப்டி (%)ஆக்ஸிஸ் வங்கி 5.27ஸ்ரீராம் பைனான்ஸ் 3.06பாரத் எலக்ட்ரானிக்ஸ் 2.38அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள் கோடி ரூபாய்க்கு பங்குகளை இருந்தனர்.
கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.92 சதவீதம் அதிகரித்து, 70.16 அமெரிக்க டாலராக இருந்தது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 4 பைசா குறைந்து, 86.16 ரூபாயாக இருந்தது.