உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / பங்கு சந்தை நிலவரம் : கைகொடுக்காத காலாண்டு முடிவுகள்

பங்கு சந்தை நிலவரம் : கைகொடுக்காத காலாண்டு முடிவுகள்

கைகொடுக்காத காலாண்டு முடிவுகள்

வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான நேற்று, இந்திய பங்குச் சந்தைகள் இறக்கத்துடன் முடிவடைந்தன. இதனால், இரண்டு நாள் சந்தை கண்ட உயர்வுக்கு தடை ஏற்பட்டது. உலக சந்தை போக்குகளின் தொடர்ச்சியாக, நேற்று வர்த்தகம் ஆரம்பித்த போது சிறிய உயர்வுடன் துவங்கியது. இருப்பினும், இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் இழுபறி, மீண்டும் அன்னிய முதலீடுகள் வெளியேற துவங்கியது, நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் கைகொடுக்காதது ஆகிய காரணங்களால், முதலீட்டாளர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டனர். ஐ.டி., வங்கி துறை பங்குகளை அதிகளவில் விற்றனர். இதனால் நாள் முழுதும் நிப்டி, சென்செக்ஸ் சரிவுடன் வர்த்தகமாகின.

உலக சந்தைகள்

புதனன்று அமெரிக்க சந்தைகள் ஏற்றத்துடன் முடிவடைந்தன. ஆசிய சந்தைகளை பொறுத்தவரை, ஜப்பானின் நிக்கி, தென்கொரியாவின் கோஸ்பி, சீனாவின் ஷாங்காய் எஸ்.எஸ்.இ., குறியீடுகள் உயர்வுடனும்; ஹாங்காங்கின் ஹேங்சேங், சரிவுடனும் முடிவடைந்தன. ஐரோப்பிய சந்தைகள் உயர்வுடன் வர்த்தகமாகின.

சரிவுக்கு காரணங்கள்

* அன்னிய முதலீடுகள் மீண்டும் வெளியேற துவங்கி இருப்பது* ஐ.டி., துறை பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவில் விற்றது நிப்டி: 25,111.45மாற்றம்: 100.60 இறக்கம் சிவப்புசென்செக்ஸ்: 82,259.24மாற்றம்: 375.24 இறக்கம் சிவப்புஉயர்வு கண்ட பங்குகள் - நிப்டி (%)டாடா கன்ஸ்யூமர்ஸ் 2.01டாடா ஸ்டீல் 1.68ஹிண்டால்கோ 0.79சரிவு கண்ட பங்குகள் - நிப்டி (%)டெக் மஹிந்திரா 2.72இண்டஸ்இண்ட் வங்கி 1.90இன்போசிஸ் 1.67

அன்னிய முதலீடு

அன்னிய முதலீட்டாளர்கள் கோடி ரூபாய்க்கு பங்குகளை இருந்தனர்.https://x.com/dinamalarweb/status/1946005242291839417

கச்சா எண்ணெய்

உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.06 சதவீதம் குறைந்து, 68.49 அமெரிக்க டாலராக இருந்தது.

ரூபாய் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 15 பைசா குறைந்து, 86.07 ரூபாயாக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை