உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஸ்வீடன் உதிரிபாக நிறுவனத்தை கையகப்படுத்தும் டாடா குழுமம்

ஸ்வீடன் உதிரிபாக நிறுவனத்தை கையகப்படுத்தும் டாடா குழுமம்

புனே; டாடா குழுமத்தின் வாகன உதிரிபாக நிறுவனமான 'டாடா ஆட்டோகாம்ப் சிஸ்டம்ஸ்' ஸ்வீடனின் ஐ.ஏ.சி., என்ற 'இன்டர்நேஷனல் ஆட்டோமோடிவ் காம்போனென்ட்ஸ்' நிறுவனத்தை கையகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.ஐ.ஏ.சி., நிறுவனம், வாகன உட்புற அமைப்புகள் மற்றும் உதிரி பாகங்களை உற்பத்தி செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் ஆண்டு வருவாய் 6,640 கோடி ரூபாய். கையகப்படுத்தப்படும் தொகை குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் இது, ஐரோப்பிய ஒழுங்குமுறை அனுமதிக்கு உட்பட்டது.ஐ.ஏ.சி., நிறுவனத்தின் உற்பத்தி ஆலை, ஸ்வீடனில் மூன்று இடங்களில் அமைந்துள்ளது. 'வோல்வோ கார்ஸ், வோல்வோ ட்ரக்ஸ், ஸ்கேனியா' நிறுவனங்களுக்கு இந்நிறுவனம் உதிரிபாகங்களை வினியோகம் செய்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி