எண்கள் சொல்லும் செய்தி
திறன் மேம்பாடுகள் மற்றும் வரவிருக்கும் ஒழுங்குமுறை மாற்றங்களுக்கான மூலதனத்தைத் தவிர, புதிய தயாரிப்புகள், தயாரிப்பு மேம்பாடுகள், மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் மின்சார வாகன உதிரிபாகங்களுக்கான மேம்பாடுக்கு, முன்னணி வாகன நிறுவனங்கள் 2025 - 26ல் முதலீடு செய்ய உள்ள ரூபாய் இது. வாகன தயாரிப்பில் சமீபத்திய புதிய விதிமுறைகளால், திறன் மேம்பாட்டுக்கு ஆட்டோமொபைல் உதிரிபாக முக்கிய நிறுவனங்கள் கூடுதல் முதலீடு செய்ய உள்ளதாக மதிப்பீட்டு நிறுவனமான, 'இக்ரா' தெரிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் - டிசம்பர் காலகட்டத்தில், வெளிநாடுவாழ் இந்தியர்களின் வங்கி கணக்கு வரவு 43 சதவீதம் அதிகரித்து, 1.16 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 81,171 கோடி ரூபாயாக இருந்ததாக ரிசர்வ் வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன. எளிதாக அன்னிய செலாவணியாக மாற்றிக் கொள்ளக்கூடிய பிக்சட் டிபாசிட் கணக்கான எப்.சி.என்.ஆரில் அதிகபட்ச தொகை வரவு இருந்தது.