எண்கள் சொல்லும் செய்தி
60,000
மும்பை மற்றும் ஆமதாபாதில், 'அதானி ஹெல்த்கேர் டெம்பிள்ஸ்' என்ற பெயரில் 60,000 கோடி ரூபாய் முதலீட்டில் ஏ.ஐ., முக்கியத்துவம் வாய்ந்த 1,000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகளை அதானி குழுமம் அமைக்க உள்ளதாக, அதன் தலைவர் கவுதம் அதானி தெரிவித்துள்ளார். மேலும், பராமரிப்பு, கல்வி மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றில் இந்த மருத்துவமனைகள் ஒருங்கிணைந்த கவனம் செலுத்தும் என அவர் தெரிவித்தார். 38
நடப்பாண்டில் 38 புதிய அரிய கனிம இருப்பிடங்களை கண்டுபிடித்துள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே, தன் பரந்த கனிம வளப் பகுதிகளை புவிசார் அரசியலுக்கு சீனா பயன்படுத்துவதாக உலகளாவிய கவலைகள் அதிகரித்துள்ளன. இந்த சூழலில், புதிய அறிவிப்பை சீனா வெளியிட்டுள்ளது. மேலும், சர்வதேச வர்த்தகத்தில் லாபம் ஈட்டுவதற்காக, கனிம ஏற்றுமதிகளை ஆயுதமாக சீனா பயன்படுத்தி வருவதாக, ஐரோப்பிய யூனியன் நாடுகள் குற்றஞ்சாட்டியுள்ளன.