எண்கள் சொல்லும் செய்தி
200
அ ன்னிய நேரடி முதலீட்டு திட்டங்களுக்காக, கிட்டத்தட்ட 200 சீன நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ள நிலையில், அவற்றுக்கு விரைவாக ஒப்புதல் அளிக்குமாறு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து, உள்துறை செயலர் தலைமையிலான, அமைச்சகங்களுக்கு இடையேயான குழுக்கள் ஆலோசனை துவங்கியுள்ளன. 4,972
இ றக்குமதி மற்றும் கடத்தலில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், கடந்த 2023 - 24ம் நிதியாண்டில் 4,972 கிலோவாக இருந்தது. இது 2024 - 25ம் நிதியாண்டில் பாதியாக குறைந்து, 2,600 கிலோவாக இருந்ததாக மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார். வழக்குகளின் எண்ணிக்கையும் 6,599ல் இருந்து 3,005 ஆக குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.