எண்கள் சொல்லும் செய்தி
1,66,000
பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேசன், தன் வணிகத்தை விரிவுபடுத்தும் விதமாக, அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1.66 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக, நிறுவனத்தின் தலைவர் அர்விந்தர் சிங் சாஹ்னி தெரிவித்துள்ளார். பெட்ரோ கெமிக்கல், இயற்கை எரிவாயு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பிரிவில் முதலீடு செய்ய உள்ளதாக அவர் தெரிவித்தார். 8,23,000
சீனாவுடனான நம் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை, கடந்த நிதியாண்டில் 8.23 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த நிதியாண்டு இந்தியாவின் மொத்த வர்த்தக பற்றாக்குறையில் 35 சதவீதம் ஆகும். கடந்த 2003 - 04ம் நிதியாண்டில் சீனாவுடனான வர்த்தக பற்றாக்குறை 9,130 கோடி ரூபாயாக இருந்த நிலையில், இதன் பின் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சரிவு கண்டது
அன்னிய செலாவணி
கையிருப்பு
புதுடில்லி;நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு, கடந்த 22ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 38,632 கோடி ரூபாய் சரிந்து, 60.78 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் வரி விதிப்பைத் தொடர்ந்து, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர் அழுத்தத்தை சந்தித்து வருகிறது. ரூபாயின் மதிப்பை மீட்க, ரிசர்வ் வங்கி டாலர் விற்பனையில் இறங்கியதால், அன்னிய செலாவணி கையிருப்பு சரிவு கண்டு உள்ளது.