வாஷிங்டன்: அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, நாடுகள் வாரியாக தனித்தனியான வரி விதிப்பை, அந்நாட்டு அதிபர் டிரம்ப் அறிவித்து வருகிறார். இதுவரை, 21 நாடுகளுக்கு வரி அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.
தன் சமூக வலைதளத்தில் டிரம்ப் தெரிவித்துள்ளதாவது: வரும் ஆக., 1 முதல் வரி விதிப்பு அமலுக்கு வருகிறது. இதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வாய்ப்ப்பில்லை. அமெரிக்க டாலருக்கு மாற்றாக, பொது கரன்சியை கூட்டாக இணைந்து கொண்டு வர முயற்சித்த பிரிக்ஸ் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகள் கூடுதல் வரியை செலுத்த நேரிடும்.மேலும், எந்தவொரு காரணத்துக்காகவும் நீங்கள் வரியை அதிகரிக்க முடிவு செய்தால், நீங்கள் தேர்ந்தெடுக்கும் எண்ணுடன், நாங்கள் கூடுதலாக 25 சதவீதம் வரியை சேர்த்து விடுவோம். அமெரிக்காவுக்கு எதிரான வர்த்தகப் பற்றாக்குறையை சரி செய்ய வரி விதிப்பு அவசியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
https://x.com/dinamalarweb/status/1943547850555822385பிரிக்ஸ் மீது இலக்கு
உலக மக்கள்தொகையில் 45 சதவீதமும்; பொருளாதார வளர்ச்சியில் 35 சதவீதமும் பங்களிப்பை வழங்கி வரும் பிரிக்ஸ் அமைப்பில், பிரேசில், இந்தியா, சீனா, ரஷ்யா, தென் ஆப்ரிக்கா உறுப்பினர்களாக உள்ளன. பட்டியலில் உள்ள வரி போக, கூடுதலாக காப்பர் இறக்குமதிக்கு 50 சதவீதமும்; மருந்து பொருட்களுக்கு 200 சதவீதம் வரையும் வரி விதிக்க இருப்பதாக டிரம்ப் அறிவித்திருக்கிறார். அத்துடன் சிப் இறக்குமதிக்கும் வரி விதிக்க இருப்பதாக அவர் தெரிவித்துள்ளது, வர்த்தக போர் அபாயத்தை அதிகரித்துள்ளது.