உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஆப்பிளை அதிரவைக்கும் டிரம்ப் ஐபோனுக்கு 25 சதவிகிதம் வரி என மிரட்டல்

ஆப்பிளை அதிரவைக்கும் டிரம்ப் ஐபோனுக்கு 25 சதவிகிதம் வரி என மிரட்டல்

வாஷிங்டன்:அமெரிக்காவில் தயாரிக்கப்படாத, ஆனால், அங்கு விற்கப்படும் ஐபோன் உள்ளிட்ட ஆப்பிள் நிறுவன தயாரிப்புகள் மீது 25 சதவீத வரி விதிக்கப் போவதாக, அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நீண்டகாலமாக அமெரிக்காவில் விற்கப்படும் ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளை, அமெரிக்காவில் தயாரியுங்கள் என அந்நிறுவன தலைவர் டிம் குக்கிடம் வலியுறுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவில் விற்பதற்கு ஆப்பிள் நிறுவனப் பொருட்களை இந்தியாவிலோ, வேறு எங்கோ தயாரிப்பது சரியல்ல என்று கூறியுள்ள அவர், இதை ஏற்காவிட்டால், குறைந்தது 25 சதவீத வரியை அந்நிறுவனம் அமெரிக்காவுக்கு செலுத்த வேண்டியது அவசியம் என தெரிவித்துள்ளார். சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்கள் மீது டிரம்ப் அதிக வரி விதித்ததன் காரணமாக, ஐபோன் உள்ளிட்ட பொருட்களின் உற்பத்தியை இந்தியாவுக்கு மாற்ற ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டது. ஆனால், அதை கைவிட்டு அமெரிக்காவில் தயாரிக்குமாறு ஆப்பிள் நிறுவனத்தை டிரம்ப் ஏற்கனவே வலியுறுத்தினார்.அண்மையில் மத்திய கிழக்கு நாடுகளில் பயணம் மேற்கொண்ட போதும் இதை அவர் தெரிவித்தார். ஆனால், இந்தியாவில் முதலீடு செய்யும் திட்டத்தை ஆப்பிள் தொடர விரும்புவதாக தகவல் வெளியான நிலையில் தற்போது எச்சரித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை