உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / புதிய உச்சம் கண்ட துாத்துக்குடி துறைமுகம்

புதிய உச்சம் கண்ட துாத்துக்குடி துறைமுகம்

துாத்துக்குடி:துாத்துக்குடி துறைமுகம், நடப்பு நிதியாண்டில் 1.50 கோடி டன் சரக்குகளை கையாண்டு, புதிய உச்சம் தொட்டுள்ளது. துாத்துக்குடி வ.உ.சி., துறைமுக ஆணைய தலைவர் சுசாந்தகுமார் புரோஹித் அறிக்கையில் கூறியுள்ளதாவது: துறைமுகத்தில் நிலக்கரி, சுண்ணாம்புக்கல், உப்பு, ராக் பாஸ்பேட், சமையல் எண்ணெய், கட்டுமான பொருட்கள் போன்றவை கையாளப்பட்டு வருகின்றன. திருப்பூர், கோயம்புத்துார் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏற்றுமதியாகும் கன்டெய்னர் பெட்டிகள் அதிகரிப்பால், அதன் அளவும் வளர்ந்து வருகிறது. சிங்கப்பூர் நிறுவன செயற்கை நார் தொழிற்சாலை, கொரியா நிறுவன காலணி தொழிற்சாலை, பாதுகாப்பு மற்றும் விண்வெளித்துறை சார்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களில் புதிய முதலீடுகள் போன்றவை, இத்துறைமுகம் சரக்கு கையாளுவதற்கு நல்ல முன்னோட்டமாக அமையும். நடப்பு நிதியாண்டில் இதுவரை, 1.50 கோடி டன் சரக்குகளை கையாண்டுள்ளது. முந்தைய நிதியாண்டை ஒப்பிடுகையில், 11 நாட்களுக்கு முன்பாகவே இப்புதிய உச்சம் எட்டப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில், 2.98 லட்சம் கன்டெய்னர்களை கையாண்டு, 9.75 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை