உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ரேபிடோ பங்குகளை விற்கிறது டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனம்

ரேபிடோ பங்குகளை விற்கிறது டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனம்

மும்பை: இரண்டு, மூன்று சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான டி.வி.எஸ்., மோட்டார், தன் கைவசம் உள்ள ரேபிடோ நிறுவனத்தின் பங்குகளை, 287.93 கோடிக்கு விற்பனை செய்வதாக அறிவித்துள்ளது. இப்பங்குகளை ஆக்ஸெல் இந்தியா -8 (மொரிஷியஸ்) மற்றும் எம்.ஐ.எச்., இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஒன் பிவி ஆகிய நிறுவனங்களுக்கு டி.வி.எஸ்., நிறுவனம் விற்பனை செய்கிறது. பங்குச்சந்தைக்கு டி.வி.எஸ்., நிறுவனம் அளித்துள்ள அறிக்கையின்படி இத்தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2022ல், வர்த்தகப் பயன்பாட்டு வாகனங்களைப் பகிர்ந்துகொள்வது தொடர்பான ஒப்பந்தத்தை, டி.வி.எஸ்., நிறுவனமும், ரேபிடோ சேவையை வழங்கும் ராப்பன் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் நிறுவனமும் கூட்டாக மேற்கொண்டன. தற்போதைய விற்பனை ஒப்பந்தத்தின்படி 11,997 சீரிஸ் டி பங்குகளை 143.97 கோடி ரூபாய்க்கு ஆக்ஸெல் நிறுவனம் வாங்கிக்கொள்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை