மேலும் செய்திகள்
டீசலை முந்தியது சி.என்.ஜி., கார்கள் விற்பனை
09-Apr-2025
சென்னை:வாகன பதிவேடு தரவுகளின் படி, மின்சார இருசக்கர வாகனங்களின் விற்பனை, கடந்த ஏப்ரலில் 40 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரலில், 65,552 வாகனங்கள் விற்பனையான நிலையில், கடந்த மாதத்தில் 91,791 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.இதில், ஓலா மற்றும் பஜாஜ் நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி, டி.வி.எஸ்., நிறுவனம் முதல் இடத்தை பிடித்துள்ளது. டி.வி.எஸ்., நிறுவனத்தின் 'ஐ க்யூப்' மின்சார ஸ்கூட்டரின் விற்பனை, 154 சதவீதம் அதிகரித்துள்ளது.இரண்டாம் இடத்தில் உள்ள ஓலாவும் மூன்றாம் இடத்தில் பஜாஜ் நிறுவனமும் உள்ளன. இவற்றை ஏத்தர், ஹீரோ மோட்டோகார்ப், கிரீவ்ஸ் எலக்ட்ரிக் உள்ளிட்ட நிறுவனங்கள் பின்தொடர்கின்றன.
65,552 (2024 ஏப்ரல்) 91,791 (2025 ஏப்ரல்)
09-Apr-2025