உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / டிசம்பரில் வேகம் எடுக்காத இருசக்கர வாகன விற்பனை

டிசம்பரில் வேகம் எடுக்காத இருசக்கர வாகன விற்பனை

சென்னை:கடந்த டிசம்பரில், இருசக்கர வாகன விற்பனை 10.33 சதவீதம் குறைந்து இருந்தாலும், கடந்த ஆண்டில், சரசரியாக 6 சதவீதத்திற்கு அதிகமான விற்பனை வளர்ச்சியை அடைந்துள்ளது. முந்தைய டிசம்பரில், 8.78 லட்சம் வாகனங்கள் விற்பனை ஆன நிலையில், கடந்த டிசம்பரில், 7.84 லட்சம் வாகனங்களே விற்பனை செய்யப்பட்டுள்ளன.ஹீரோ மற்றும் பஜாஜ் ஆகிய இரு நிறுவனங்கள், கடந்த டிசம்பர் விற்பனையில் சரிவை சந்தித்துள்ளன. சுசூகி, என்பீல்டு நிறுவனங்கள் இரட்டை இலக்க வளர்ச்சியடைந்துள்ளன.இந்திய வாகன தயாரிப்பாளர் சங்கத்தின் தரவுகள் படி, 2023ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2024ல் நவம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில், இருசக்கர வாகன விற்பனை 16.23 சதவீதம் உயர்ந்து, 1.84 கோடி வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

நிறுவனங்கள் டிசம்பர். 2023 டிசம்பர். 2024 வளர்ச்சி (%)

ஹீரோ 3,77,842 2,94,152 22.15 (குறைவு)டி.வி.எஸ்., 2,14,988 2,15,075 0.04 பஜாஜ் 1,58,370 1,28,335 18.97 (குறைவு)சுசூகி 69,025 78,834 14.21 என்பீல்டு 57,291 67,891 18.50மொத்தம் 8,77,561 7,84,287 10.33 (குறைவு)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ