உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஜூலை - செப்., காலாண்டில் வாகன ஏற்றுமதி 26 சதவிகிதம் உயர்வு

ஜூலை - செப்., காலாண்டில் வாகன ஏற்றுமதி 26 சதவிகிதம் உயர்வு

புதுடில்லி:நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டான ஜூலை - செப்., மாதங்களில் வாகன ஏற்றுமதி 26 சதவீதம் அதிகரித்துள்ளதாக, வாகன நிறுவனங்கள் சங்கமான சியாம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அதன் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்: கடந்த நிதியாண்டின் இரண்டாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பு நிதியாண்டின் அதே காலத்தில் பயணியர் வாகனங்கள், இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள் ஏற்றுமதி இதுவரை இல்லாத அளவு அதிகரித்தது. மொத்த வாகனங்கள் ஏற்றுமதி, 26 சதவீதம் உயர்ந்தது. அதில் பயணியர் வாகனங்கள் அதிகபட்சமாக 23 சதவீத இடம் பிடித்தன. கார் ஏற்றுமதி, 2024 ஜூலை - செப்., மாதங்களில் 1.96 லட்சமாக இருந்தது. அது இந்த ஆண்டின் அதே காலத்தில், 21 சதவீதம் உயர்ந்து 2.42 லட்சமாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ