உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  விக்ரம் சோலார் தமிழகத்தில் உற்பத்தி துவக்கம்

 விக்ரம் சோலார் தமிழகத்தில் உற்பத்தி துவக்கம்

புதுடில்லி: விக்ரம் சோலார் நிறுவனம், தமிழகத்தில் அமைத்துள்ள அதன் 5 ஜிகாவாட் தானியங்கி சோலார் மாட்யூல் உற்பத்தி ஆலையில் பணியை துவங்கியுள்ளது. ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லத்தில் இந்த ஆலை அமைந்துள்ளது. இதோடு சேர்த்து நிறுவனத்தின் மொத்த ஆண்டு உற்பத்தி திறன் 9.50 ஜிகாவாட்டாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 27,000 சதுரமீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலை, அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதாக விக்ரம் சோலார் தெரிவித்துள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மாட்யூல்கள் நாடு முழுதும் உள்ள சோலார் திட்டங்களில் பயன்படுத்தப்படும், என்றும் ஆலையில், 40 - 50 சதவீதம் பெண் தொழிலாளர்களை பணியமர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை