வோல்டாஸ் இழப்பீடு தர உத்தரவு
டாடா குழும நிறுவனமான வோல்டாஸ், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஓ.எச்.எல்., சைப்ரஸ் நாட்டைச் சேர்ந்த கான்ட்ராக் ஆகிய நிறுவனங்களுடன் கூட்டு முயற்சியில் சட்டப் பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த 2023 ஆகஸ்டில், கத்தாரின் தோஹா நீதிமன்றத்தில், ஒப்பந்தத்துக்கு எதிராக வழக்கு தொடுத்தது. இதற்கு பதிலடியாக ஓ.எச்.எல்., நிறுவனம் இழப்பீடு கேட்டு மனு தாக்கல் செய்தது. இதற்கு, 373 கோடி ரூபாய் மதிப்பிலான இரு உத்தரவாதம் அளித்த நிலையில் வங்கி இத்தொகையை விடுவிப்பதை நிறுத்தி வைத்தது. இந்த வழக்கில் கத்தார் நீதிமன்றம், ஓ.எச்.எல்.,லுக்கு ஆதரவாக 402 கோடி செலுத்த உத்தரவிட்டது. இதையடுத்து, வோல்டாஸ் நிறுவன பங்கு விலை 3 சதவீதம் சரிந்தது. இவ்வழக்கில் மேல்முறையீடு செய்யப்படும் என வோல்டாஸ் தெரிவித்துள்ளது.