உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஜி.எஸ்.டி., குறைப்பால் தமிழகத்துக்கு என்ன பயன்?

ஜி.எஸ்.டி., குறைப்பால் தமிழகத்துக்கு என்ன பயன்?

புதுடில்லி:சமீபத்திய ஜி.எஸ்.டி., சீர்திருத்தங்களால், தமிழகத்துக்கு கிடைக்கக் கூடிய நன்மைகள் குறித்து, மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதன் முக்கிய விபரங்கள்:

1 அடுத்த தலைமுறை ஜி.எஸ்.டி., சீர்திருத்தங்கள் வாயிலாக, ஜவுளி, கைவினை பொருட்கள், கயிறு பொருட்கள், உணவு மற்றும் மீன்பிடித் துறைகளில் ஜி.எஸ்.டி., 5 சதவீதம் அல்லது பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கான நன்மையை பொறுத்தவரை, இந்த பொருட்களின் விலை 6 முதல் 11 சதவீதம் வரை குறையும். 2 பொருட்களின் விலை குறைந்திருப்பது, தேவையை அதிகரிக்க வழிவகுக்கும். இதனால், மாநிலத்தில் வாகனத் துறையில் பணியாற்றும் 22 லட்சம் பேர், 14 கடலோர மாவட்டங்களில் மீன்பிடித் தொழிலில் பணியாற்றும் 10.50 லட்சம் பேர், திருப்பூரில் உள்ள பின்னலாடை தொழில் து றையில் பணிபுரியும் கிட்டத்தட்ட 10 லட்சம் பேர், காஞ்சிபுரம் பட்டு தயாரிப்பில் ஈடுபடும் 14,000க்கும் அதிகமானோர் என பல லட்சக்கணக்கானோர் நேரடியாக பயனடைவர். 3 கா ஞ்சிபுரம் பட்டு, பவானி ஜமுக்காளம், சுவாமிமலை ஐம்பொன் சிலைகள், மணப்பாறை முறுக்கு போன்ற பாரம்பரியத் தொழில்கள் மீண்டும் போட்டித்தன்மையுடன் வளர்ச்சி பெறும். 4 இ வை தவிர, வாகனம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின்னணு பொருட்கள், மற்றும் பாதுகாப்புத் துறை போன்ற பெரிய துறைகளிலும் உற்பத்தி செலவு குறையும் என்பதால், மாநிலம் அதிகம் பயன்பெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !