ஜி.எஸ்.டி.,யில் என்ன பிரச்னை? (7)
ஜி.எஸ்.டி.,யில் நிலவும் பிரச்னைகள், குறைபாடுகள், குளறுபடிகள், குற்றச்சாட்டுகள் மற்றும் தீர்வுக்கான யோசனைகள் குறித்து வணிகர்கள் உள்ளிட்ட வரி செலுத்துவோர் எவரும் எழுதலாம் என்ற, 'தினமலர்' அறிவிப்புக்கு நல்ல வரவேற்பு; நுாற்றுக்கணக்கான கடிதங்களை எழுதி குவித்துவிட்டனர்.அதன்விவரம், 'தினமலர்' இதழில் இப்பகுதியில் வெளியாகும்.ஆவணப் பராமரிப்பு 3 ஆண்டுகள் போதுமே!
கம்ப்யூட்டர் விற்பனையகத்தில் பணிபுரிகிறேன். ஜி.எஸ்.டி., அமலாக்கம் செய்யப்பட்ட பின், வரி ஏய்ப்பு தவிர்க்கப்பட்டிருக்கிறது. எனவே, ஜி.எஸ்.டி.,யை வரவேற்கிறோம்.ஜி.எஸ்.டி., பதிவேடுகளான கொள்முதல் மற்றும் விற்பனை விவரங்களை ஆறு ஆண்டுகள் வைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. இதனை, ஆண்டுக்கு ரூ.5 கோடிக்குக் கீழ் வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள் மூன்று ஆண்டுகள் வரை வைத்திருந்தால் போதும் என மாற்ற வேண்டும்.கொள்முதல், விற்பனை ரசீதுகளை டிஜிட்டலாக பராமரிப்பதாக இருப்பின் இந்தப் பிரச்னை எழாது. கோப்புகளாக பராமரிக்க வேண்டும் என்பதால், அதிக ஆவணங்களாக தேங்கி விடுகிறது. சிறு வியாபாரிகள் மிகக்குறைந்த பரப்பளவுள்ள இடத்தில் வியாபாரம் செய்வதால், ஆறு ஆண்டுகளுக்கான பதிவேடுகளை சிறு இடத்தில் வைத்துப் பராமரிப்பது சிரமம். இதனை ஜி.எஸ்.டி., கவுன்சில் மனதில் வைத்து, 3 ஆண்டுகள் பராமரித்தால் போதும் என அறிவிக்க வேண்டும்.- மணி, மாதம்பாக்கம், சென்னை.வாடகை வருவாய் மீதான ஜி.எஸ்.டி., 5 சதவீதமாக குறைக்கப்பட வேண்டும்நாங்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டு சேவையான, 'ஈவன்ட் மேனேஜ்மென்ட்' துறையில் இருக்கிறோம். எங்களின் பிரதான வர்த்தகம் ஜெனரேட்டர், ஏ.சி., ஏர்கூலர் உள்ளிட்டவற்றை வாடகைக்குக் கொடுத்து வருவாய் ஈட்டுவதாகும். ஜி.எஸ்.டி., அதிகாரிகள், ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமான மதிப்புள்ள ஒவ்வொரு பொருளை வாடகைக்கு அனுப்பும் போதும் அதற்கு 'இ-வே பில்' கட்டாயம் என்கின்றனர்.எங்கள் வாடிக்கையாளர்களில் 90 சதவீதம் பேர், திருமணம், பிறந்த நாள் போன்ற விசேஷங்களுக்காக, வாடகைக்கு பொருள் எடுப்பவர்கள். இவர்கள் ஜி.எஸ்.டி., பதிவு செய்யாத தனிநபர்கள். எந்த தனி நபரும் 18 சதவீத வரி செலுத்த விரும்பவோ, தயாராகவோ இல்லை. 18 சதவீத வரி என்பது மிக அதிகம். வாடகை வருவாய் மீதான ஜி.எஸ்.டி.,யை 5 சதவீதமாக குறைக்க வேண்டும்.-- வி.வி. தேவதாஸ்ஜி.எஸ்.டி., நடைமுறையில் நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், எதிர்பார்ப்பு, தீர்வு என எதுவாயினும் உங்களின் கருத்துகளை எங்களுக்கு அனுப்புங்கள். 'தினமலர்' நாளிதழில் வெளியாகி மத்திய, மாநில அரசுகளின் கவனத்தைப் பெறும். அனுப்புவோரின் விவரங்கள் அவர்கள் விரும்பினால் மட்டுமே வெளியிடப்படும். முகவரி:ஜி.எஸ்.டி., - தீர்வைத் தேடி!தினமலர், டி.வி.ஆர்., ஹவுஸ், சுந்தராபுரம், கோவை - 641 024.Email: dinamalar.in