உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  செப்டம்பர் மாதத்துக்கான சிறந்த பங்குகள் ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ் பரிந்துரை ஆக்சிஸ் செக்யூரிட்டீஸின் உத்தி

 செப்டம்பர் மாதத்துக்கான சிறந்த பங்குகள் ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ் பரிந்துரை ஆக்சிஸ் செக்யூரிட்டீஸின் உத்தி

சந்தையில் பணப்புழக்கம் அதிகமாக இருப்பதை மட்டும் வைத்து பங்குகளை வாங்காமல், நிறுவனங்களின் லாப வளர்ச்சி, வலுவான பணப்புழக்கம், நிதி நிலை மற்றும் எதிர்கால வருமான வாய்ப்புகளை அடிப்படையாக கொண்டு முதலீடு செய்ய வேண்டும் என, 'ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ்' தெரிவித்து உள்ளது.செப்டம்பர் மாதத்துக்கான சிறந்த பங்குகள் குறித்த தனது அறிக்கையில் இந்நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:இந்திய பங்கு சந்தையின் நடுத்தர மற்றும் நீண்டகால கண்ணோட்டம் சாதகமாகவே உள்ளது. நிறுவனங்களின் வருமான வளர்ச்சி தொடர்ந்து வலுவாக இருப்பதுடன், அரசின் மூலதன செலவினம், உள்நாட்டு பொருளாதார வளர்ச்சி மற்றும் நிறுவனங்களின் மேம்பட்ட செயல்பாடுகள் சந்தைக்கு வலுவான ஆதரவை அளிக்கின்றன.Galleryஆனால், சந்தை மதிப்பீடுகள் ஏற்கனவே உயர்ந்துள்ளதால், இனி சந்தையின் அடுத்த கட்ட உயர்வுக்கு நிறுவனங்களின் உண்மையான லாப வளர்ச்சியே பிரதான காரணியாக இருக்கும். எனவே, அதிக மதிப்பீட்டில் உள்ள பங்குகளில் முதலீட்டை குவிப்பதை தவிர்த்து, நியாயமான விலையில் தரமான வளர்ச்சி திறன் கொண்ட நிறுவனங்களை தேர்வு செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி