மேலும் செய்திகள்
ஆயு ஷ் மான் பாரத் ஹெல்த் அட்டையால் என்ன பயன்?
01-Dec-2025
ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான பி.எப்.ஆர்.டி.ஏ., அரசு பணியில் இல்லாதவர்களுக்கான என்.பி.எஸ்., விதிகளில் சில அதிரடி மாற்றங்களை செய்துள்ளது. இதன் வாயிலாக, பணம் எடுப்பதிலும், வெளியேறுவதிலும் கூடுதல் வசதிகள் கிடைக்க உள்ளன. அதன் முக்கிய அம்சங்கள் * அரசு பணியில் இல்லாதவர்களுக்கு என்.பி.எஸ்., திட்டத்தில் இணைந்த பிறகு, வெளியேறுவதற்கு இருந்த 5 ஆண்டு கட்டாய காத்திருப்பு காலம் நீக்கப்பட்டுள்ளது * மொத்த சேமிப்பு 8 லட்சம் ரூபாய்க்கு குறைவாக இருந்தால், முழு தொகையையும் ஒரே தவணையாக எடுத்து கொள்ள அனுமதி * மொத்த சேமிப்பு 8 லட்சம் முதல் 12 லட்சம் ரூபாய் வரை இருந்தால், 6 லட்சம் ரூபாயை மொத்தமாக எடுக்கலாம்; மீதமுள்ள தொகைக்கு ஆறு ஆண்டுகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் * மொத்த சேமிப்பு 12 லட்சம் ரூபாய்க்கும் மேல் இருந்தால், 80 சதவீத தொகையை எடுத்து கொள்ளலாம்; மீதமுள்ள 20 சதவீத தொகை மட்டுமே ஓய்வூதிய தொகுப்பு நிதியாக மாற்றப்படும் * சந்தாதாரர்கள் தற்போது 85 வயது வரை முதலீட்டை தொடரலாம். ஒருவர் 60 வயதானாலும் புதிதாக என்.பி.எஸ்., கணக்கை துவங்கலாம். * சந்தாதாரர், 60 வயது பூர்த்தியடைந்தாலோ அல்லது 15 ஆண்டுகள் திட்டத்தில் நீடித்தாலோ வெளியேற அனுமதி உண்டு * இந்திய குடியுரிமையை துறப்பவர்கள், கணக்கை முடித்துவிட்டு மொத்த பணத்தையும் எடுத்துக் கொள்ளலாம் * சந்தாதாரர் காணாமல் போனால், வாரிசுகளுக்கு இடைக்கால நிவாரணமாக, மொத்த முதலீட்டில் 20 சதவீத தொகை வழங்கப்படும் * பகுதியளவு திரும்ப பெறாத, ஓய்வூதிய தொகுப்பு நிதியை தேர்வு செய்யாத சந்தாதாரர் உயிரிழந்தால், முழு தொகை யும் வாரிசுகளிடம் ஒப்படைக்கப்படும் * அரசு ஊழியர்களுக்கு 5 ஆண்டு லாக்-இன் காலம் தொடரும்; அவர்கள் முழு தொகையையும் திரும்ப பெறுவதற்கான வரம்பு 5 லட்சம் ரூபாயிலிருந்து, 8 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது.
01-Dec-2025