ஐ.பி.ஓ., ஆர்வம் காட்டும் கோககோலா
ஆர்வம் காட்டும் கோககோலா
அ மெரிக்காவைச் சேர்ந்த கோககோலா நிறுவனத்தின் இந்திய பதிப்பான 'ஹிந்துஸ்தான் கோககோலா பிவரேஜஸ்' நிறுவனம், 8,800 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட, புதிய பங்கு வெளியீடுக்கு வர திட்டமிட்டு உள்ளது. இது தொடர்பாக வங்கிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வரும் இந்நிறுவனம், அடுத்தாண்டு பங்கு வெளியீட்டுக்கு வர தயாராகி வருவதாக கூறப்படுகிறது. பெங்களூரை தலைமையிடமாக கொண்ட இந்நிறுவனத்துக்கு, 12 மாநிலங்களில், 14 ஆலைகள் இயங்கி வருகின்றன.