உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  ஜீரோதாவின் கைட் செயலியால் கமாடிட்டி வர்த்தகத்தில் குழப்பம்

 ஜீரோதாவின் கைட் செயலியால் கமாடிட்டி வர்த்தகத்தில் குழப்பம்

'ஜீ ரோதா' நிறுவனத்தின் 'கைட்' செயலியில் எம்.சி.எக்ஸ்., கமாடிட்டி பொசிஷன்களின் சராசரி விலைகள் 'என்.ஏ.,/0' என காட்டுவதாக 'எக்ஸ்' தளத்தில் வர்த்தகர்கள் புகார் தெரிவித்துள்ளனர். வர்த்தக நேரத்தில் ஏற்பட்ட இந்த குளறுபடியால் லாப, நஷ்ட கணக்கீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதற்கு, எம்.சி.எக்ஸ்., சந்தையில் இருந்து தகவல் பெறுவதில் ஏற்பட்ட தாமதமே காரணம் என ஜீ ரோதா நிறுவனம் விளக்கமளித்துள்ளது. மேலும், இந்த சிக்கலை விரைவில் தீர்க்க எம்.சி.எக்ஸ்., உடன் இணைந்து செயல்படுவதாகவும் கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ