உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / விண்ணப்பமின்றி மருத்துவ, மகப்பேறு பலன் இ.எஸ்.ஐ.சி., புதிய விதிகள் வெளியீடு

விண்ணப்பமின்றி மருத்துவ, மகப்பேறு பலன் இ.எஸ்.ஐ.சி., புதிய விதிகள் வெளியீடு

மருத்துவ விடுப்பு மற்றும் மகப்பேறு பணப்பலன்களை பெற, தொழிலாளர்கள் இனி தனித்தனியாக விண்ணப்பிக்க தேவையில்லை உள்ளிட்ட புதிய விதிகளை தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் (இ.எஸ்.ஐ.சி.,) வெளியிட்டுள்ளது. கடந்த 1950ம் ஆண்டு முதல் அமலில் இருந்த பழைய விதிகளுக்கு பதிலாக, சமூகப் பாதுகாப்பு சட்டம் 2020ன் கீழ் புதிய ‘இ.எஸ்.ஐ., (பொது) விதிமுறைகள், 2026’ கொண்டுவரப்பட்டுள்ளன. இதனால் 4 கோடி தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உட்பட 15 கோடி பேர் பயனடைவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மருத்துவ விடுப்பு, மகப்பேறு பலன்கள் நேரடி பண பரிமாற்றம் வழியே தானாக வரவாகும். இ.எஸ்.ஐ.சி., தளத்தில் மருத்துவ சான்றிதழ் பெறுதல், நிறுவனம் மாதாந்திர அறிக்கை தாக்கல் செய்தல், வங்கி கணக்கு மற்றும் காப்பீட்டு எண்ணை ஆதாருடன் இணைத்தல் ஆகிய 3 நிபந்தனைகள் அவசியம்  பணி தொடர்பான விபத்தால் தற்காலிக, நிரந்தர ஊனம் அல்லது உயிரிழப்பு ஏற்பட்டால் தனி விண்ணப்பம் தேவையில்லை. நிறுவனம் அளிக்கும் விபத்து அறிக்கையே விண்ணப்பமாக கருதப்படும். விரும்பினால் தொழிலாளர்கள் நேரடியாகவோ, இணையம் வழியாகவோ விண்ணப்பிக்கலாம்  முன்பெல்லாம் நிறுவனம் விபத்து தகவல் தெரிவித்த பிறகும், தற்காலிக ஊனத்திற்கு தனியாகவும், நிரந்தர ஊனம் மற்றும் உயிரிழப்பு நேர்வுகளில் முதல் தவணை பணத்தை பெறவும் விண்ணப்பம் அளிக்க வேண்டியிருந்தது. புதிய விதிகளால் இனி அந்த அலைச்சல் இருக்காது  பிரசவத்திற்கு முன்பு மகப்பேறு பலன் கோரும் அவகாசம் 50 நாட்களிலிருந்து 56 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ள பெண்களுக்கு இது 42 நாட்களாக இருக்கும்  நிறுவனம் உரிய நேரத்தில் அறிக்கை அளிக்காவிட்டாலும் தொழிலாளியின் பலனை நிறுத்த முடியாது; இ.எஸ்.ஐ.சி., அதை பெற்றுக்கொள்ளும். தொழில்நுட்ப கோளாறால் டி.பி.டி., தோல்வியடைந்தால் மாற்று வழியில் பணம் வழங்கப்படும்  ஆவணங்கள் கிடைத்த 7 நாட்களில் மருத்துவ விடுப்பு பலனும், 14 நாட்களில் மகப்பேறு பலனின் முதல் தவணையும் வழங்கப்படும். 10 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்கள் கொண்ட நிறுவனங்களில், மாதம் 21,000 ரூபாய் வரை (மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25,000) ஊதியம் பெறுவோர் தகுதியுடையவர்  பதிவு, அட்டை வழங்குதல் உள்ளிட்ட சேவைகள் மின்னணு மயமாகின்றன. தானியங்கி விண்ணப்பம் மற்றும் விபத்து இழப்பீட்டு விதிகள் அமலாகும் தேதியை இ.எஸ்.ஐ.சி., தலைமை இயக்குநர் அறிவிப்பார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி