அனைவருக்கும் எட்டர்னல் – எஸ்.பி.ஐ., கார்டு
‘ எட்டர்னல் – எஸ்.பி.ஐ.,’ கிரெடிட் கார்டு தொடக்கத்தில் குறுகிய அளவிலேயே வெளியிடப்பட்ட நிலையில், தற்போது தகுதியுள்ள அனைவருக்கும் விண்ணப்பங்கள் திறக்கப்பட்டுள்ளன. ‘ஜொமேட்டோ, டிஸ்ட்ரிக்ட், பிளிங்கிட்’ ஆகிய மொபைல் செயலிகள் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இந்த கார்டில், எட்டர்னல் நிறுவனத்தின் தளங்கள் மற்றும் வேறு சில தளங்களிலும் தள்ளுபடி, ‘கேஷ்பேக்’ உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன. சலுகைகள்
ஜொமேட்டோ, டிஸ்ட்ரிக்ட், பிஸ்ட்ரோ ஆகிய தளங்களில் தகுதியுள்ள பரிவர்த்தனைகளுக்கும், பிளிங்கிட் தளத்தில் மின்னணு மற்றும் அழகுசாதன பொருட்களை வாங்குவதற்கும் 10 சதவீதம் உடனடி தள்ளுபடி பிளிங்கிட் தளத்தில் தகுதியுள்ள பிரிவுகளுக்கு மட்டும் 5 சதவீதம் தள்ளுபடி ‘அப்போலோ 24|7, இக்ஸிகோ, ஊபர், அர்பன் கம்பெனி’ ஆகிய தளங்களில் 5 சதவீதம் கேஷ்பேக். வாங்குவதற்கான கட்டணம் ரூ.499 புதுப்பிப்பதற்கான கட்டணம் ஆண்டுக்கு ரூ.499 (ஆண்டுக்கு ரூ.2 லட்சம் செலவு செய்தால் தள்ளுபடி செய்யப்படும்)