உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  காப்பீட்டு துறையின் சவால்கள் கருத்தரங்கில் நிபுணர்கள் விளக்கம்

 காப்பீட்டு துறையின் சவால்கள் கருத்தரங்கில் நிபுணர்கள் விளக்கம்

இந்திய காப்பீட்டு துறையின் சவால்கள், வாய்ப்புகள் மற்றும் எதிர்கால மாற்றங்கள் குறித்த தேசிய கருத்தரங்கு சென்னை தேவநேய பாவாணர் நுாலக வளாகத்தில் 'மெட்ராஸ் இன்சூரன்ஸ் இன்ஸ்டிடியூட்' நடத்தியது. இதில், 'யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ்' நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சத்யஜித் திரிபாதி, எல்.ஐ.சி., செயல் இயக்குநர் சலில் விஸ்வநாத், 'யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ்' நிறுவன மண்டல மேலாளர் சுரேஷ், மெட்ராஸ் இன்சூரன்ஸ் இன்ஸ்டிடியூட் தலைவர் ராஜ்குமார் அரோரா, செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட பலர் உரையாற்றினர். ஐ.ஆர்.டி.ஏ.ஐ., ஒழுங்குமுறை மாற்றங்கள், டிஜிட்டல் வளர்ச்சி, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் வரும் 2047க்குள் அனைவருக்கும் இன்சூரன்ஸ் எனும் இலக்கை அடைவதற்கான வழிகள் குறித்து இதில் விவாதிக்கப்பட்டது. பாலிசி காலம் முழுதும் சேவை தொடர வேண்டும் காப்பீடு முகவர் கமிஷன் கட்டமைப்பில் மாற்றம் வந்தால் பாலிசிதாரர்களுக்கு பிரீமியம் குறையுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை எதுவும் கூற முடியாது. அறிவிப்பு வந்த பிறகு நிலைமைக்கு ஏற்ப வணிகத்தை எப்படி கொண்டு செல்வது என்று முடிவு செய்யலாம். காப்பீட்டு திட்டங்களில் 'மிஸ் செல்லிங்' அதிகரிப்பதாக வெளியாகும் தகவல்கள் குறித்து... இது திட்டமிட்ட தவறான விற்பனை அல்ல, முகவர்களுக்கு தயாரிப்புகள் பற்றிய போதிய விழிப்புணர்வு, தகவல் தெரியாததே காரணம். முகவர்கள் மற்றும் வினியோகஸ்தர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளித்து, எந்த நபருக்கு எந்த திட்டம் உகந்தது என்பதை உணர்த்தி வருகிறோம். முகவர்களுக்கு புதிய பாலிசிகளை விற்பனை செய்வதற்கு அதிக ஊக்கம் தர வேண்டுமா அல்லது பாலிசி காலம் முழுதும் சேவை வழங்குவதற்கு தர வேண்டுமா?இரண்டுமே முக்கியம். அதிக பாலிசிகளை விற்பனை செய்யும், அதேநேரம், பாலிசி காலம் முழுதும் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குவதும் அவசியம். இரண்டுக்குமே அவர்களுக்கு வெகுமதி அளிக்கப்பட வேண்டும். தற்போதைய சூழலில் மக்களுக்கு எந்த வகையான காப்பீடு தேவை? முதியவர்களுக்கு ஓய்வூதிய திட்டங்கள், இளைஞர்களுக்கு டேர்ம் இன்சூரன்ஸ் என தேவை வேறுபடும்.

Gallery- சலில் விஸ்வநாத் செயல் இயக்குநர், எல்.ஐ.சி.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்


 ஐ.பி.ஓ.,

6 minutes ago  






முக்கிய வீடியோ