மேலும் செய்திகள்
பத்திர பதிவுத்துறை இணையதளம் முடக்கம்
30-Sep-2025
புதுடில்லி, மோசடி நோக்கில் செயல்படும் போலி இணைய தளங்களிடமிருந்து எச்சரிக்கையாக இருக்குமாறு பொதுமக்களை, காப்பீடு கண்காணிப்பு மற்றும், மேம்பாட்டு ஆணையமான ஐ.ஆர்.டி.ஏ.ஐ., கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கை: ஐ.ஆர்.டி.ஏ.ஐ.,யின் அதிகாரப்பூர்வ நுகர்வோர் கல்வி இணைய தளம் என்ற பெயரில், மோசடியான, போலியான இணைய தளம் செயல்படுவது குறித்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். https://plicyholdergov.org என்ற முகவரியில், ஆன்லைனில் பிரீமியம் செலுத்தும் வசதி அளிப்பதாக கூறி, தனிப்பட்ட தகவல்களை சேகரிக்கும் இணைய தளத்தை மக்கள் நாடக்கூடாது. இந்த இணைய தளம், ஐ.ஆர்.டி.ஏ.ஐ., மத்திய நிதி சேவை துறை, india.gov.in, காப்பீட்டு குறைதீர் நடுவர் கவுன்சில் ஆகியவற்றின் அலுவலக இலச்சினை, சின்னங்களை மோசடியாக பயன்படுத்தி வருவது தெரிய வந்துள்ளது. இவற்றை பயன்படுத்தி, ஆன்லைன் பிரீமியம் செலுத்தும் வசதி அளிப்பதாக தெரிவித்து, தனிநபர் தகவல்களை திரட்டும் இந்த இணைய தளம் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காப்பீடு தொடர்பான தகவல்களுக்கும் சேவைகளுக்கும் ஐ.ஆர்.டி.ஏ.ஐ.,யின் அதிகாரப்பூர்வ இணைய தளங்களை மட்டுமே மக்கள் நாட வேண்டும். இதுபோன்ற போலியான, மோசடியான இணைய தளம் குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
30-Sep-2025