உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  ஏற்றத்தில் தங்கம், வெள்ளி

 ஏற்றத்தில் தங்கம், வெள்ளி

போரினால் உலகளாவிய எரிசக்தி வினியோகத்தில் தடை வரலாம் என்ற அச்சம், பாதுகாப்பு கருதி முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வது, சீனா உள்ளிட்ட மத்திய வங்கிகளின் தங்கம் கொள்முதல் மற்றும் தொழிற்துறை தேவைகளால் தங்கம், வெள்ளி விலைகள் உயர்ந்து வருகின்றன. சர்வதேச 'காமக்ஸ்' சந்தையில் நேற்று தங்கம் 4,146 டாலராகவும், வெள்ளி 60.30 டாலராகவும் உயர்ந்துள்ளன. இது கடந்த இரண்டு வாரங்களில் இல்லாத உச்சமாகும். உள்நாட்டு 'எம்.சி.எக்ஸ்' சந்தையில் 10 கிராம் தங்கம் 1.47 லட்சம் ரூபாயாகவும், வெள்ளி பியூச்சர் விலை 2.21 லட்சம் ரூபாயாகவும் வர்த்தகமாகிறது. சந்தை ஏற்ற இறக்கங்கள் தொடரும் என்பதால் சிறு முதலீட்டாளர்கள் அவசரப்பட்டு மொத்தமாக முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும். நீண்டகால நோக்கில் இ.டி.எப்., அல்லது மியூச்சுவல் பண்டு வழியாக எஸ்.ஐ.பி., முறையில் சிறுக சிறுக முதலீடு செய்வதே சிறந்த உத்தி என நிபுணர்கள் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !