இந்த வாரம் எப்படி இருக்கும்?
நியுட்ரன்: வாங்க அப்பு… மூணு நாள் ஊருக்கு போறேன்னு நீங்க சொன்னப்பவே சந்தேகம் வந்துச்சு. அதே மாதிரி நடந்துடுச்சு. சரியான இறக்கம் வந்துடுச்சே! டவுனு: இந்த வாரமும் மூணு நாள் எங்க கைதான் ஓங்கியிருந்துச்சு. 229 புள்ளிகளை காலி பண்ணிட்டோம்ல. அப்பு: கடந்த 52 வாரத்துல, வாராந்திர ரீதியா பார்த்தா 27 வாரம் நிப்டி ஏற்றத்துல தான் இருந்திருக்கு. 25 வாரம் தான் இறக்கம். இதை நீங்க மறந்துடாதீங்க. நியுட்ரன்: சூப்பர். அப்ப கன்பார்ம்டா சந்தை மேலே போகாது போல. அப்பு: என்ன நியுட்ரன் நீங்களுமா! நியுட்ரன்: சரி விடுங்க. வர்ற வாரம் இன்ப்ளேஷன் டேட்டா, எம்3 பணப்புழக்கம், வங்கி வைப்புநிதி வளர்ச்சி, கடன் வளர்ச்சி, பேலன்ஸ் ஆப் டிரேட், அந்நிய செலாவணி கையிருப்பு இதுமாதிரியான இந்திய பொருளாதார தரவுகள் வெளிவர இருக்கும். அமெரிக்க பொருளாதார தரவுகளுன்னு பார்த்தா, ஜாப்லெஸ் க்ளெய்ம்ஸ், ரீட்டெய்ல் சேல்ஸ், ப்ரொட்யூசர்ஸ் பிரைஸ் இண்டெக்ஸ், ரீட்டெய்ல் இன்வென்ட்ரீஸ் (கார்கள் நீங்கலாக) போன்றவை வெளிவர இருக்கு. அப்பு: என்ன நிறுத்தீட்டிங்க. டெக்னிக்கல் சப்போர்ட் ரெசிஸ்டென்ஸ் சொல்லலையே. நியுட்ரன்: ஒரு நிமிஷம் பொறுங்க. தண்ணி குடிச்சுக்கிறேன். நிப்டி-க்கு 25,270, 25,050 மற்றும் 24,860-ல வாராந்திர சப்போர்ட்டும், 25,750, 26,020 மற்றும் 26,200-ல வாராந்திர ரெசிஸ்டென்ஸும் இருக்க வாய்ப்பிருக்கு. 25,450 என்பது ஒரு முக்கியமான லெவலா பார்க்கப்படணும். இதற்கு கீழே போனா இறக்கம்; மேலேயே இருந்தா ஏற்றமுன்னு வச்சுக்கலாம். டவுனு: காலாண்டு முடிவுகளை விட்டுட்டீங்களே?! நியுட்ரன்: கொஞ்சம் பொறுங்க சார். மூச்சு விட்டுக்கிறேன். ஆதித்யா பிர்லா ரீட்டெய்ல் பேஷன், அப்பல்லோ டயர், ஏஷியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் பைனான்ஸ், பாரத் போர்ஜ், பயோகான், இப்படி 2,000க்கும் மேற்பட்ட நிறுவனங்களோட காலாண்டு முடிவுகளும் வர்ற வாரம் வெளியிடப்பட இருக்கு. அப்பு: அப்போ இது காலாண்டு ரிசல்ட்கள் வாரம்னு சொல்லுங்க! டவுனு: சரி நியுட்ரன், அடுத்த வாரம் எப்படி இருக்குமுன்னு தெளிவா சொல்லுங்க பார்ப்போம். அப்பு: வர்ற வாரத்துல தெளிவு என்பதற்கு வாய்ப்பேயில்லை. டவுனு: அதைத்தான் நான் நியுட்ரன் வாயால கேட்க விரும்புறேன். நியுட்ரன்: எங்களுக்கு கொஞ்சம் இந்த வாரம் வாய்ப்பிருக்குன்னு வேணா சொல்வேன். அப்பு: குழப்பம் வந்தா உங்களுக்கு கொண்டாட்டம் தான் இல்லீங்களா நியுட்ரன்? நியுட்ரன்: அப்பப்ப நாங்களும் வந்து போகணும் சார். இல்லாட்டி நீங்க ரெண்டு பேரும் சிந்திக்காம செயல்பட வாய்ப்பிருக்கு. டவுனு: என்ன ஒரு தன்னலமற்ற சேவை! அப்பு: பாவம். கிண்டல் பண்ணாதீங்க. நியுட்ரன் கரெக்டாத்தான் சொல்றாரு. குழப்பமான சூழ்நிலை வர்றப்பதான் சந்தை திசை தெரியாம போகுது. அப்பத்தான் புல்களும், பியர்களும் சிந்திக்க அவகாசம் எடுத்துட்டு செயல்பட ஆரம்பிக்கிறாங்க. செய்திகள் ஏதும் குறுக்கே புகுந்தாதான் எல்லாம் தாறுமாறாப்போயிடுது. டவுனு: ஒண்ணு தெளிவா தெரியுது. எங்களுக்கு ஆதரவான செய்தி ஏதும் இல்லாட்டி, வாரக் கடைசியிலதான் எங்களுக்கு வேலையிருக்கும் போல! நியுட்ரன்: சரி! நீங்க கிளம்புறதுன்னா கிளம்புங்க. நண்பர் ஒருவரை இங்கே வரச் சொல்லியிருக்கேன். அவர் என்னை பிக்-அப் பண்ணிக்கொள்வார் என்று சொல்ல, அப்பும் டவுனும் எதிரெதிர் திசையில் புறப்பட்டுச் சென்றனர். 25,450 என்பது ஒரு முக்கியமான லெவலா பார்க்கப்படணும். இதற்கு கீழே போனா இறக்கம்; மேலேயே இருந்தா ஏற்றமுன்னு வச்சுக்கலாம்.