மேலும் செய்திகள்
பாய்ச்சலுக்கு தயாராகும் லக்கேஜ் துறை
8 minutes ago
நீங்க என்ன நினைக்கிறீங்க?
10 minutes ago
வெளிநாடுகளுக்கு பணப்பரிவர்த்தனை வருகிறது புதிய விதிமுறைகள்
15 minutes ago
ஐ.பி.ஓ., துளிகள்
1 hour(s) ago
தங்கம், வெள்ளியை தொடர்ந்து பிளாட்டினத்தின் விலையும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சந்தையின் தேவைக்கு ஏற்ற வினியோகம் இல்லாததே காரணம் என, 'உலக பிளாட்டினம் முதலீட்டு கவுன்சில்' தெரிவித்துள்ளது. இந்நிலையில், தங்கம், வெள்ளி, பங்குகள் என பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு, பிளாட்டினம் ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என, நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். முதலீடு செய்வது எப்படி 1 தங்கம், வெள்ளி ஆபரணங்களைப்போல, பிளாட்டினத்தையும் வாங்கலாம். நகைக்கடைகள், ஆன்லைன் தளங்கள் வாயிலாக பிளாட்டினத்தால் ஆன நாணயங்கள், கட்டிகளையும் வாங்கலாம். நேரடியாக வாங்கும் போது 'பிளாட்டினம் கில்ட் இண்டியா'வின் சான்றிதழ் அல்லது அங்கீகரிக்கப்பட்ட 'ஹால்மார்க் முத்திரை' இருப்பதை உறுதி செய்வது அவசியம். 2 தங்கம், வெள்ளிக்கு இருப்பதுபோல, இந்திய பங்குச்சந்தைகளில் பிளாட்டினம் இ.டி.எப்.,கள் கிடையாது. ஆனால் 'ஜீரோதா, குரோ, ஐ.சி.ஐ.சி.ஐ., டைரக்ட்' போன்ற செயலிகள் வாயிலாக, சர்வதேச சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள பிளாட்டினம் இ.டி.எப்.,களில் முதலீடு செய்ய முடியும் கவனிக்க வேண்டிய ரிஸ்குகள் 1 வெளிநாட்டு சந்தையில் முதலீடு செய்யும்போது, டாலர்- ரூபாய் மதிப்பு மாற்றத்தால் லாபம் அல்லது நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. 2 தங்கம் போல் இல்லாமல், பிளாட்டினம் தொழிற்சாலைகளிலும் பயன்படுவதால், இதன் விலை பொருளாதாரச் சூழலுக்கு ஏற்ப அதிக ஏற்ற இறக்கங்களைச் சந்திக்கக்கூடும்.
8 minutes ago
10 minutes ago
15 minutes ago
1 hour(s) ago