சந்தையில் புதிய குறியீடுகள் அறிமுகம்
சந்தை குறியீடுகள்
தேர்ந்தெடுக்கப்பட்ட பங்குகளின் ஒட்டுமொத்த ஏற்றம் அல்லது இறக்கத்தை அளவிடுவதற்கு சந்தை குறியீடுகள் உதவுகின்றன. உதாரணமாக, பிரபல 'சென்செக்ஸ்' குறியீடு நாட்டின் மிகப்பெரிய 30 நிறுவனங்களின் செயல்பாட்டை குறிக்கிறது. அதேபோல 'நிப்டி 50' குறியீடு மிகப்பெரிய 50 நிறுவனங்களின் செயல்பாட்டை குறிக்கிறது. சந்தையின் போக்கு, முதலீட் டாளர்களின் மனநிலை பற்றியும் புரிந்துகொள்ள குறியீடுகள் உதவுகின்றன. இக்குறியீடுகளின் அடிப்படையில் 'இண்டெக்ஸ் பண்டு' மற்றும் இ.டி.எப்., போன்ற பாஸிவ் பண்டுகளும் செயல்படுகின்றன. என்.எஸ்.இ., அறிமுகம்
தேசிய பங்கு சந்தையின் துணை நிறுவனமான 'என்.எஸ்.இ., இண்டிசஸ்' புதிதாக இரண்டு குறியீடுகளை தொடங்கியுள்ளது. நிப்டி 1000 இது பரந்த சந்தையை சேர்ந்த 1,000 பங்குகளை கொண்டுள்ளது. நிறுவனங்களின் 'ப்ரீ ப்ளோட்' சந்தை மதிப்பின் அடிப்படையில் பங்குகளுக்கு ஒதுக்கீட்டு விகிதம் நிர்ணயிக்கப்படும். குறியீட்டில் ஆண்டுக்கு இருமுறை மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் மறு சீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நிப்டி 1000 ஈக்வல் வெயிட் நிப்டி 1,000 குறியீட்டில் உள்ள அத்தனை பங்குகளும் இந்த குறியீட்டிலும் இடம்பெற்றிருக்கும். ஆனால், ஒவ்வொரு காலாண் டிலும் மறுசீரமைப்பு நடவடிக்கையின்போ து, எல்லா பங்குகளுக்கும் சமமான அளவில் ஒதுக்கீட்டு விகிதம் வழங்கப்படும்.
என்.எஸ்.இ., பங்கு விலை 2,000 ரூபாயை
தாண்டியதுஎன்.எஸ்.இ., நிறுவன பங்குகள் கடந்த செப்., 24ம் தேதி பட்டியலிடப்பட்டது. ஆனால் அதன்பின் விலை இறங்கியது. எனினும், அக்., 26ம் தேதி முதல் பங்கு விலை மீண்டும் வேகமாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில், நேற்று பங்கு விலை முதல்முறையாக 2,000 ரூபாயை தாண்டியது. வர்த்தக முடிவில் 1,990 ரூபாய்க்கு நிலைபெற்றது. நவம்பரில் மட்டும் 13ம் தேதி வரை என்.எஸ்.இ., பங்கு 11.67 சதவீதம் உயர்ந்துள்ளது.