மேலும் செய்திகள்
தேசிய பங்கு சந்தை பங்கு வெளியீட்டுக்கு செபி பச்சைக்கொடி
23 hour(s) ago
என்.எப்.ஓ.,
05-Sep-2026
சந்தை விலை நிலவரம்
04-Sep-2026
தினம் ஒரு பங்கு
04-Sep-2026
1. ரென்டோமோஜோ இந்நிறுவனம் பர்னிச்சர் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை ஆன்லைன் வாயிலாக வாடகைக்கு விடுகிறது. ஐ.பி.ஓ.,வின் மொத்த மதிப்பு 1,256 கோடி ரூபாய். கிடைக்கும் நிதியை கடன்களை அடைக்கவும், குத்தகை மற்றும் லைசன்ஸ் கட்டணங்களை செலுத்தவும், மற்ற பொது தேவைகளுக்காகவும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. பங்கு விலை வரம்பு : ரூ.384 - 404 தொடங்கும் தேதி : செப்., 9, 2026 முடியும் தேதி : செப்., 11, 2026 2. மணிபால் பேமென்ட் அண்டு ஐடென்டிட்டி சொல்யூஷன்ஸ் இந்நிறுவனம் வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களுக்கு தேவையான பரிவர்த்தனை சேவைகளை வழங்கி வருகிறது. ஐ.பி.ஓ.,வின் மொத்த மதிப்பு 805 கோடி ரூபாய். கிடைக்கும் நிதியை உபகரணங்களுக்கான மூலதன செலவுக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. பங் கு விலை வரம்பு : ரூ.322 - 339 தொடங்கும் தேதி : செப்., 9, 2026 முடியும் தேதி : செப்., 11, 2026 3. கரம்தரா இன்ஜினியரிங் இந்நிறுவனம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறைக்கு தேவையான பொருட்களையும், மின் தொடர் கம்பிகளையும் உற்பத்தி செய்கிறது. ஐ.பி.ஓ.,வின் மொத்த மதிப்பு 875 கோடி ரூபாய். கிடைக்கும் நிதியை கடன்களை அடைப்பதற்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. பங்கு விலை வரம்பு : ரூ.241 - 254 தொடங்கும் தேதி : செப்., 9, 2026 மு டியும் தேதி : செப்., 11, 2026 4. எல்.சி.சி., புராஜெக்ட்ஸ் இந்நிறுவனம் நீர்ப்பாசனம் மற்றும் நீர் வினியோக திட்டங்களுக்கு தேவையான பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமான சேவைகளை வழங்கி வருகிறது. ஐ.பி.ஓ.,வின் மொத்த மதிப்பு 427 கோடி ரூபாய். கிடைக்கும் நிதியை, உபகரணங்களை வாங்கவும், கடன்களை அடைக்கவும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. பங்கு விலை வரம்பு : ரூ.139 -146 தொடங்கும் தேதி : செப்., 9, 2026 முடியும் தேதி : செப்., 11, 2026
23 hour(s) ago
05-Sep-2026
04-Sep-2026
04-Sep-2026